அஜ்மீர் தர்கா சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டதாக வழக்கு.. பறந்த நீதிமன்ற உத்தரவு! பரபர ராஜஸ்தான்
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா இந்துக்கள் வணங்கும் சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையை தொடர்ந்து அஜ்மீர் நீதிமன்றம், தர்கா நிர்வாகம், மாநில சிறுபான்மை துறை மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மசூதி இந்து கோயில் என புகார் எழுந்த நிலையில் அங்கு ஆய்வு நடத்த அதிகாரிகள் சென்றனர். அப்போது ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் பலியாகி விட, இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த அதிக வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு தர்கா இந்துக் கோயிலை இடித்து கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் தொழுகை நடத்தி செல்கின்றனர். அஜ்மீரில் வாழ்ந்த சூஃபி ஞானி ஆன காஜா மொய்னாபிதீன் சிஷ்டியின் பெயரில்தான் இந்த தர்கா கட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து இஸ்லாமியர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் சிவன் கோயில் ஒன்றை இடித்துவிட்டு இந்த தர்கா கட்டப்பட்டதாக புகார் இருந்திருக்கிறது. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் இருந்தபோது இந்த புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. மஹராணா பிரதாப் சிங் சேனா என்ற இந்துத்வா அமைப்பினர் தேசிய தலைவராக இருந்த ராஜூவர்தன் சிங் பார் மார்க் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார். மேலும் தர்காவில் தொல்பொருள் துறை, நீதித்துறை, வருவாய்த்துறை இணைந்து கள ஆய்வு நடத்த வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் அப்போது இந்த விவகாரம் அவ்வளவு ஆக பேசப்படவில்லை. இந்த நிலையில் இந்து சேனா என்ற அமைப்பின் தலைவரான விஷ்ணுகுப்தா அஜ்மீர் சிவில் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் தர்காவின் ஜன்னல்களில் இந்து சின்னமான சுவஸ்திக் மற்றும் தாமரை சின்னங்கள் அமைந்திருக்கிறது என்றும், இவை இந்துக்கள் வணங்கும் சின்னங்கள் என்பதால் தர்கா சிவன் கோயிலை இடித்து விட்டு கட்டப்பட்டிருக்கிறது. எனவே தர்காவில் கள ஆய்வு நடத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் ஆதாரமாக 1910ஆம் ஆண்டில் வெளியான ஹர்விலாஸ் ஷர்தா என்ற நிறுவனம் வெளியிட்ட நூல் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து இந்த மனு தொடர்பாக அஜ்மீர் தர்காவின் நிர்வாக குழு, ராஜஸ்தான் மாநில சிறுபான்மை துறை மற்றும் இந்திய தொல்பொருள் துறை ஆய்வகம் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications