ஆஸ்திரேலியாவில் 20 ஆண்டுகளில் முதல் முறையாக.. மீண்டும் பிரதமரான அல்பானீஸ்- பிரதமர் மோடி வாழ்த்து!
டெல்லி: ஆஸ்திரேலியா நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகிறார். ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் 20 ஆண்டுகளில் ஆளும் கடசி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது இது முதல் முறையாகும். ஆஸ்திரேலியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆண்டனி அல்பானீஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் லேபர் கட்சியான -தொழிலாளர் கட்சியே மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து 2022-ம் ஆண்டு தேர்தலில் ஆஸ்திரேலியாவின் பிரதமரான ஆண்டனி அல்பானீஸ் மீண்டும் பிரதமராகிறார்.

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் கடந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து ஆட்சியை முதல் முறையாக தக்க வைத்துள்ளது லேபர் கட்சி. இது ஆஸ்திரேலியா வரலாற்றில் முக்கிய சாதனையாகும்.
ஆஸ்திரேலியாவின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆண்டனி அல்பானீஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி.
ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆண்டனி அல்பானீஸ் அவர்களே, உங்களது மகத்தான வெற்றிக்கு வாழ்த்துக்கள்! இந்த உறுதியான தீர்ப்பு, உங்கள் தலைமையின் மீது ஆஸ்திரேலிய மக்கள் வைத்திருக்கும் நீடித்த நம்பிக்கையைக் குறிக்கிறது. இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கான நமது பகிரப்பட்ட தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச் செல்லவும் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications