இன்று நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டம்.. மத்திய அரசுக்கு எதிராக திரளும் அமைப்புகள்.. பரபர பந்த்!
மத்திய பாஜக அரசை கண்டித்து இன்றும் நாளையும் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
Recommended Video

டெல்லி: மத்திய பாஜக அரசை கண்டித்து இன்றும் நாளையும் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இன்று அதிகாலை தொடங்கிய இந்த போராட்டம் நாளை மாலை வரை நடக்க உள்ளது. பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்தும், மிக மோசமான திட்டங்களை எதிர்த்தும் இந்த போராட்டம் நடக்கிறது
போராட்டம் காரணமாக பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இதனால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏன் போராட்டம்
போராட்டம் பல்வேறு காரணங்களை மையமாக வைத்து நடத்தப்படுகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தொழிற்சாலைகள் பாதித்தது. பணியாளர்களுக்கு போதிய சம்பளம் வழங்கும் கொள்கைகளை மத்திய அரசு வகுக்காதது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காதது என்று 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை மையமாக வைத்து போராட்டம் நடக்கிறது.

எத்தனை பேர்
மொத்தம் 20 கோடி ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள். தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நல அமைப்புகள் போராட்டத்தை நடத்துகிறது. இந்தியா முழுக்க பல்வேறு அமைப்பு மற்றும் அமைப்பு சாரா பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். அனைத்து மாநில ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

விவசாயிகள் சங்கம்
அதேபோல் நாடு முழுக்க இருக்கும் விவசாயிகள் சங்கமும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. அகில இந்திய விவசாயிகள் சங்கம் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. கம்யூனிஸ்ட் அமைப்புகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நாளைய மாஸ்
இந்த போராட்டம் நாளை வரை நடக்கிறது. நாளை இது மிகப்பெரிய போராட்டமாக உருவெடுக்கும் என்று கூறுகிறார்கள். நாளை போராட்டக்காரர்கள் டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்த இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்துகள் நிறுத்தம்
போராட்டம் காரணமாக பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆனால் தமிழகத்தில் இதனால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தபட்டுள்ளது. பாஜக ஆளாத பல மாநிலங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தை அடுத்து பல மாநிலங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications