பந்த் எதிரொலி.. 2வது நாளாக தமிழக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்.. பயணிகள் கடும் அவதி!
நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் காரணமாக கேரளா, கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் 2வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் காரணமாக கேரளா, கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் 2வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று நாடு முழுக்க அகில இந்திய பந்த் நடைபெற்றது. அதை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

இதனால் அனைத்து மாநிலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்தப் போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியது. பல மாநிலங்களில் பேருந்துகள், கடைகள் இயங்கவில்லை.
தென்னிந்தியாவில் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்த போராட்டம் காரணமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நேற்று கடைகள், நிறுவனங்கள் எப்போதும் போல இயங்கியது.
ஆனால் தமிழக எல்லையில் தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டது. புதுச்சேரியில் இயக்கப்பட்ட சில பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதலும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கேரள எல்லையிலும் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications