நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டம்.. கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தம்
மத்திய பாஜக அரசை கண்டித்து நடக்கும் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் காரணமாக கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: மத்திய பாஜக அரசை கண்டித்து நடக்கும் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் காரணமாக கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்தும், மிக மோசமான திட்டங்களை எதிர்த்தும் இந்த போராட்டம் நடக்கிறது. இன்றும் நாளையும் இந்த போராட்டம் நடக்கிறது.

தொழிலாளர் நல சங்கங்கள் மூலம் போராட்டம் நடக்கிறது. 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் போரட்டத்தை நடத்துகிறது. 20 கோடி ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள்.
ஆனால் போராட்டம் காரணமாக தமிழகத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. தமிழகத்தில் பேருந்துகள், அலுவலகங்கள் எப்போதும் போல இயங்கி வருகிறது. பெரும்பாலான கடைகளும் இயங்கி வருகிறது.
ஆனால் போராட்டம் காரணமாக கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நல அமைப்புகள் போராட்டத்தை நடத்துகிறது. கர்நாடகாவில் இந்த போராட்டம் பெரிய அளவில் நடக்கிறது.
கர்நாடகாவில் காலை 8 மணிக்கு பிறகு பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை. அதேபோல் ஆட்டோக்கள் தொடங்கி மக்கள் போக்குவரத்து வாகனங்கள் எதுவும் இயக்கவில்லை. பெங்களூரை இந்த போராட்டம் முடக்கி உள்ளது.
இதனால் தற்போது ஓசூர் எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டது. இதனால் அதிகாலை பெங்களூர் நோக்கி சென்ற தமிழர்கள் இன்னலுக்கு உள்ளானார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications