ஆபரேஷன் சிந்தூர்.. 100 பயங்கரவாதிகள் பலி! அனைத்துக் கட்சி கூட்டத்தில் ராஜ்நாத் சிங் தகவல்
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி இன்று காலை 11.30 மணியளவில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடந்தது. இதில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானில் 100 பயங்கரவாதிகள் உயிரிழ்ந்ததாக கூறியுள்ளார். நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் ஒன்றரை மணி நேரமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் 22 ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடியும் சூளுரைத்து இருந்தார்.

நள்ளிரவில் திடீர் தாக்குதல்
மேலும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இந்த சம்பவத்தில் தக்க பாடம் கற்பிக்கவும் இந்தியா திட்டமிட்டது. இதற்காக பாகிஸ்தான் மீது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. சிந்து நதி நீர் ஒப்பந்தம், பாகிஸ்தானியர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.
இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இதேபோல் எல்லையோரங்களில் இந்தியா படைகளை பாதுகாப்புக்காக நிறுத்தியது. மேலும் நாடு முழுவதும் போர் ஒத்திகைக்கும் மோடி ஏற்பாடு செய்து இருந்தார். இதனால் பாகிஸ்தான் பயந்து போய் இருந்தது. ஆனால் நேற்று இந்தியா நம் மீது தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்காத நிலையில், நேற்று அதிகாலை 1.44 மணியளவில் பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
70 பேர் கொல்லப்பட்டனர்
பாகிஸ்தானில் உள்ள அப்பாவி மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்யும் விதமாக பயங்கரவாதிகள் முகாம்களை மட்டுமே குறிவைத்து இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்ற இந்த அதிரடி தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து நேற்று ஏன் இந்த தாக்குதல் நடத்தினோம் என்பது குறித்தும் இந்தியா விளக்கம் அளித்தது. பயங்கரவாதிகளை குறிவைத்து மட்டுமே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளன. தொடர்ந்து நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போர் ஒத்திகை நடந்தது.
இன்று அனைத்து கட்சி கூட்டம்
இந்த நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஆபரேஷன் சித்தூர் குறித்து விவாதிப்பதற்காக இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்தினை மத்திய அரசு ஏற்பாடு செய்தது. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் கூட்டம் தொடங்கியது.
இதில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானில் 100 பயங்கரவாதிகள் உயிரிழ்ந்ததாக கூறியுள்ளார். மேலும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாகவும் அவர் கூறியிருக்கிறார். நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் ஒன்றரை மணி நேரமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
100 பயங்கரவாதிகள் பலி
கூட்டத்தில் ராஜ்நாத் சிங் கூறுகையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-ஈ-முகம்மது மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா போன்ற அமைப்புகளின் பயங்கரவாத முகாம்கள் மட்டும் தான் குறிவைக்கப்பட்டன. மொத்தம் 20க்கும் மேற்பட்ட இடங்கள் குறி வைக்கப்பட்டன. இந்த தாக்குதல்களில் 100 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர். இதற்காக இந்திய விமானப்படை ரஃபேல் விமானங்கள், ஸ்கால்ப், ஹாமர் போன்ற நவீன ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டது.
20 இடங்கள் குறி வைக்கப்பட்டதில், பாகிஸ்தானின் பஹாவல்பூர், முரிட்கே, சியால்கோட், மியூசஃபராபாத் உள்ளிட்ட 9 இடங்களில் இந்த தாக்குதல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய முகாம்கள் அழிக்கப்பட்டு விட்டது. பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்த நினைத்தால் இந்தியா மீண்டும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும். பாகிஸ்தான் முயற்சி செய்தால் இந்தியா தக்க பதிலடியை கொடுக்கும் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது
இதேபோல் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், இன்னும் ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை. இன்னும் தொடர்கிறது என்று தெரிவித்தார். மேலும் இந்தியாவின் பயங்கரவாதங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவதாக கூறியுள்ளதாக தெரிவித்தார். திமுக எம்பி டி ஆர் பாலுவும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜேபி நட்டா, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, கிரண் ரிஜிஜு, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
-
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications