ஒரே நாடு ஒரே தேர்தல்.. டெல்லியில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தொடங்கியது
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கேட்க டெல்லியில் அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநிலங்களின் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இதற்கு பலர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இது போல் ஒரே நேரத்தில் இரு தேர்தல்களும் நடத்தப்பட்டால் பண விரயம் தவிர்க்கப்படும். அரசு அதிகாரிகள், ஆசிரியர்களை அவ்வப்போது தேர்தல் பணிக்கு அமர்த்தும் நிலையும் அவர்களுக்கு தேர்தல் பணி ஊதியம் கொடுக்கும் குறைக்கப்படும்.
தேர்தல் நேரங்களில் அவ்வப்போது பாதுகாப்பு அதிகாரிகளை பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். அடிக்கடி தேர்தல் வருகிறபோது நடத்தை விதிகளை அமல்படுத்துவதால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகிறது. அது இது போன்று ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் பாதிக்கப்படாது உள்ளிட்ட காரணங்கள் மத்திய அரசு சார்பில் முன்வைக்கப்படுகின்றன.
இது தொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. இதற்காக மக்களவை, மாநிலங்களவையில் உறுப்பினர்களை கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி , மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் திமுக, தெலுங்கு தேசம், காங்கிரஸ் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை. கட்சியின் முக்கிய பிரதிநிதிகள், மாநில முதல்வர்கள் கலந்து கொண்டுள்ள இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமைக்கு பதில் நிர்வாகிகள் பங்கேற்க முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டதால் டெல்லி சென்றும் சிவி சண்முகம் அதில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications