Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலியல் புகார்.. அனைத்து அரசியல் கட்சிகளும் உட்கட்சி குழு அமைக்க வேண்டும்: மேனகா காந்தி கடிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: Metoo இயக்கம் தேசிய அளவில், கவனம் ஈர்த்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்துமே, பாலியல் புகார் குறித்து விசாரிக்க உட்கட்சி குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

இதுபற்றி மேனகா காந்தி கூறுகையில், பாலியல் புகார் குறித்து விசாரிக்க உட்கட்சி குழு ஒன்றை அமைக்க வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளேன். நாட்டில், 6 தேசிய கட்சிகள் மற்றும் 90 சிறிய கட்சிகள் உள்ளன. அவற்றிற்கு அலுவலகங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான பெண்களும் அங்கு பணிபுரிகின்றனர். அங்கு அவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

All recognised political parties to constitute the internal complaints committee: Maneka Gandhi

ஏற்கனவே, பாலியல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான அமைச்சரவை குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், மேனகாகாந்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தி 3 மாத காலத்திற்குள், இந்த குழுவினர் அறிக்கை அளிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+