Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்னியை சுற்றி வரணும்.. இல்லைனா இந்து திருமணமே செல்லாது.. அலகாபாத் ஐகோர்ட் தந்த பரபர தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றாலும் அனைத்து சடங்குகளையும் முறையாகக் கடைப்பிடிக்கவில்லை என்றால் அதை சட்டப்பூர்வமா திருணமாகக் கருதமுடியாது என்று அலகாபாத் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

இந்து திருமணம் தொடர்பாகக் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு சிக்கிம் சிங் என்பவர் தனது மனைவி தன்னை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகப் புகார் அளித்தார்.

 Allahabad High Court says Hindu marriage invalid without Saptapadi rituals

இதை எதிர்த்து ஸ்மிருதி சிங் என்ற அந்த பெண் அலகாபாத் உயர்நீதிமன்றம் மேல்முறையீடு செய்திருந்தார். அதில் சடங்குகள் கடைப்பிடிக்கவில்லை என்றால் இந்து திருமணம் செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சடங்குகள்: இந்த வழக்கை விசாரணை செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், அக்னியை சுற்றி வரும் சப்தபதி மற்றும் பிற சடங்குகள் இல்லையென்றால் இந்து திருமணம் செல்லாது என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் குமார் சிங், "திருமணம் என்ற வார்த்தையின் அர்த்தம், திருமணத்தை முறையான சடங்குகளுடன் நடத்தப்பட வேண்டும் என்பதாகும். எனவே, திருமணம் முறையான சடங்குகள் இல்லாமல் நடத்தப்பட்டால் அதைத் திருமணமாகவே கருத முடியாது.

எனவே, முறையாகத் திருமணம் நடைபெறவில்லை என்றால் தற்போதைய சட்டப்படி அதைத் திருமணமாகவே கருத முடியாது. அதன்படி இந்து சட்டத்தின் கீழ் 'சப்தபதி' எனப்படும் அக்னியை சுற்றி வரும் சடங்கு தவிர்க்கவே கூடாத ஒன்றாகும். ஆனால், இந்த வழக்கில் 'சப்தபதி' நடந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

அலகாபாத் உயர் நீதிமன்றம்: இந்து திருமணச் சட்டம், 1955இன் பிரிவு 7ஐ அலகாபாத் உயர் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த சட்டத்தின்படி இந்து திருமணம் என்பது முறையான சடங்குகளைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி மணமகனும், மணமகளும் அக்னியைச் சுற்றி 7 அடி நடக்கும் சப்தபதி சடங்கும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதில் ஏழாவது அடி எடுக்கும்போது தான் திருமணம் முழுமையாவதாகக் கருதப்படுகிறது.

இந்தச் சட்டத்தைக் குறிப்பிட்ட குஜராத் நீதிமன்றம், கடந்த 2022 ஏப்ரல் 21ஆம் தேதி தொடரப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் நீதிபதி மேலும் கூறுகையில், "சப்தபதி சடங்கு குறித்து புகாரிலும் சரி, நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதத்திலும் சரி எந்தவொரு தகவலும் இல்லை. எனவே, இரண்டாவது திருமணம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமானதாக இல்லை. எனவே, அந்த பெண் குற்றம் செய்ததாக நீதிமன்றம் கருத முடியாது" என்று அவர் தெரிவித்தார்.

என்ன வழக்கு: வழக்கை தொடர்ந்த ஸ்மிருதி சிங்கிற்கும் சத்திய சிங்கிற்கும் இடையே கடந்த 2017இல் திருமணம் நடைபெற்றது. இருப்பினும், மோசமான நடத்தை உள்ளிட்ட காரணங்களால் ஸ்மிருதி சிங் தனது கணவர் வீட்டில் இருந்து வந்துவிட்டார். மேலும், வரதட்சணை கேட்டுத் துன்புறுத்துவதாகப் புகாரும் அளித்தார். இது குறித்த விசாரணைக்குப் பின், கணவர் மற்றும் மாமியார் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து சத்யம் சிங் பதிலுக்கு அந்த பெண் மீது புகார் அளித்தார். அந்த புகாரை மிர்சாபூர் போலீசார் முழுமையாக விசாரித்தனர். அதில் ஸ்மிருதிக்கு எதிரான புகார்கள் முற்றிலும் பொய்யானது என்பது உறுதியானது. பிறகு மீண்டும் சத்யம் சிங் தனது மனைவி விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருணம் செய்து கொண்டதாகக் கடந்த 2021 செப்டம்பர் 20ஆம் தேதி புகார் அளித்தார்.

வாதம்: அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 2022 ஏப்ரல் 21ஆம் தேதி மிர்சாபூர் நீதிமன்றம் ஸ்மிருதிக்கு சம்மன் அனுப்பினார். இந்த வழக்கை எதிர்த்துத் தான் அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் ஸ்மிருதி சிங் புகார் அளித்த நிலையில், அதற்குப் போட்டியாகவே இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதை டிஸ்மிஸ் செய்யுமாறு அந்த பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வழக்கில் தான், சடங்குகள் முறையாகக் கடைப்பிடிக்கவில்லை என்றால் திருமணம் செல்லாது என்று அலகாபாத் ஐகோரட் தெரிவித்து அளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+