மாசற்ற சிமெண்ட் உற்பத்தி.. சாதனை படைத்த அதானி குழுமத்தின் அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி!
டெல்லி: அதானி குழுமத்தின் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களான அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி ஆகியவை முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களின் நிகர பூஜ்ஜிய இலக்குகளை (net zero targets) SBTi எனப்படும் Science Based Targets initiative (அறிவியல் அடிப்படையிலான இலக்குகள் முன்முயற்சி) அமைப்பு அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், இவ்விரு நிறுவனங்களும் இந்த அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் முன்னணி சிமெண்ட் நிறுவனங்களாக உருவெடுத்து உள்ளன.

நிகர பூஜ்ஜிய இலக்குகளை அங்கீகரித்த SBTi
SBTi-யின் கார்ப்பரேட் நிகர பூஜ்ஜியத் தரம் என்பது, காலநிலை மாற்ற அறிவியலுக்கு ஏற்ப நிறுவனங்களின் நிகர பூஜ்ஜிய இலக்குகளை (net zero targets) அமைப்பதற்கான உலகின் ஒரே கட்டமைப்பு ஆகும்.
இந்த அங்கீகாரம் மூலம், அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி ஆகிய நிறுவனங்கள் நிலையான மற்றும் பொறுப்பான முறையில் வணிகம் செய்ய உறுதி பூண்டுள்ளன என்பது நிரூபணமாகிறது. மேலும், பாரிஸ் ஒப்பந்தத்தின் 1.5°C இலக்கை பூர்த்தி செய்ய இந்த நிறுவனம் உறுதி பூண்டுள்ளதை காட்டுகிறது. பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கை அடையும் அளவில் வெப்ப, மாசு உமிழ்வைக் குறைப்பதில் இந்த நிறுவனம் உறுதியாக உள்ளதையும் இது காட்டுகிறது.
அதானி குழுமத்தின் சிமென்ட் வணிகத்தின் CEO வினோத் பேஹெட்டி இது குறித்து கூறுகையில், "அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி ஆகிய நிறுவனங்கள் காலநிலை மாற்றத்தில் செலுத்த வேண்டிய கவனத்தை உணர்ந்துள்ளன. அதை உணர்ந்து பொறுப்புடன் நாங்கள் செயல்படுகிறோம். நாங்கள் சுற்றுசூழல் சார்ந்த நல்ல முயற்சிகளுக்கு முன்னோடியாக இருந்து வருகிறோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். கார்ப்பரேட் காலநிலை இலக்குகளுக்கான மிக உயர்ந்த தரத்தை SBTi பிரதிபலிக்கிறது. அதை அடைந்துள்ளதால் பெருமை அடைகிறோம்.
SBTi -ஆல் எங்கள் இலக்குகள் அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் எங்களின் நோக்கம் வெற்றி பெற்றுள்ளது, வளர்ச்சி அதே சமயம் சுற்றுச்சூழல் மேலாண்மை இரண்டும் கைகோர்த்து செல்லும் ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறோம். நாங்கள் உலகின் 9-வது பெரிய சிமெண்ட் உற்பத்தியாளர்.
Cemex, Heidelberg மற்றும் Holcim க்குப் பிறகு, நிகர பூஜ்ஜிய இலக்கு சரிபார்ப்பை அடைந்த இந்த அளவிலான ஒரே நிறுவனம் நாங்கள் தான். எங்களுடைய பயணம் இத்துடன் முடிவடையவில்லை. இது ஒரு கார்பன் இல்லாத மாசற்ற உலகத்திற்கான எங்கள் பார்வையை நனவாக்குவதற்கான மற்றொரு படியாகும்."
அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி நிறுவனங்கள் மாசு வெளியிடும் அளவை குறைப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன. நேரடி கார்பன் குறைப்புக்கு முன்னுரிமை அளித்து, SBTi அளவுகோல்களுக்கு இணங்க இந்த நிறுவனங்கள் மாசு அளவை குறைத்து உள்ளன. பசுமை சக்தி, AFR, எரிசக்தி திறன், தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் செய்த மாற்றங்கள் மூலம் இந்த சாதனையை அந்த நிறுவனங்கள் செய்துள்ளன. சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் (IRENA) தலைமையிலான தொழில் டீகார்பனைசேஷன் கூட்டமைப்பில் (AFID) சேர்ந்த முதல் சிமென்ட் உற்பத்தியாளர் அம்புஜா ஆகும். அதானி குழுமத்தின் மிகப்பெரிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது.
பசுமை எரிசக்தி மாற்றத்திற்கான முதலீடுகள்
இந்தியாவின் பசுமை எரிசக்தி துறையில் மாற்றங்களை மேற்கொள்ள 100 பில்லியன் டாலர்களை இந்த குழுமம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த குழுமம் 2030-க்குள் புதுப்பிக்கத்தக்க மின்சார திறனை 14.2 GW லிருந்து 50 GW ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. மேலும் ஒருங்கிணைந்த பசுமை ஹைட்ரஜன் தளத்தை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் கீழ், அம்புஜா சிமெண்ட்ஸ் FY'28க்குள் புதுப்பிக்கத்தக்க மற்றும் பசுமை ஆதாரங்கள் மூலம் அதன் மின் தேவைகளில் 60% அடைய இலக்கு வைத்துள்ளது.
இதில் 1 GW சூரிய மற்றும் காற்று மின்சாரம், 376 MW Waste Heat Recovery System மின்சாரம் ஆகியவை அடங்கும். இதில் ஏற்கனவே முறையே 299 MW மற்றும் 186 MW திறன்களை அந்த நிறுவனம் எட்டியுள்ளது. நிகர பூஜ்ஜியத்தை அடைவதில் பசுமை ஹைட்ரஜன் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்த தொடர் நடவடிக்கைகள் அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி வெளியிடும் மாசுஅளவை குறைப்பதை துரிதப்படுத்தவும், புதைபடிவ எரிபொருட்களை சார்ந்திருப்பதை குறைக்கவும் உதவும். இந்த அங்கீகாரம் ஒரு மைல்கல் மட்டுமல்ல.. மிகப்பெரிய சாதனையும் கூட! அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி சிமெண்ட் தொழில்துறைக்கு புதிய தரநிலைகளை அமைத்து வருகின்றன. சிமெண்ட் துறையிலும் இது போன்ற நடவடிக்கைகள் சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளன.












Click it and Unblock the Notifications