ஓயாத அக்னிபாத் போராட்டம்! முப்படை தளபதிகளுடன் 2வது நாள் தீவிர ஆலோசனையில் ராஜ்நாத் சிங்! என்னாச்சி?
டெல்லி: அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கும் போராட்டங்களுக்கு மத்தியில் இன்று 2வது நாளாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ராணுவம், கடற்படை, விமானப்படையில் 'அக்னிபாத்' திட்டத்தில் ஆள்சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜூன் 14ல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு வெளியிட்டார்.
இத்திட்டம் 4 ஆண்டுகால குறுகிய பணியாற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. 4 ஆண்டு பணியை முடிப்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது.

நாடு முழுவதும் போராட்டம்
இந்த திட்டம் மூலம் இந்தியாவின் முப்படைகளையும் இளமையாக இளைஞர்கள் நிறைந்ததாக வைத்து கொள்ளலாம் என ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இருப்பினும் இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறுகிய கால திட்டம் என்பது நீண்டநாள் ராணுவ சேவையாற்ற விரும்பும் இந்திய இளைஞர்களின் விருப்பத்துக்கு மாறாக உள்ளது. மேலும் ஒப்பந்த பணியாக இது உள்ளது என இளைஞர்கள் குற்றம்சாட்டினர்.

ரயில்கள் எரிப்பு
இதுதொடர்பாக பீகார், உத்தர பிரதேசம், தெலங்கானா உள்பட பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. ரயில்கள் எரிக்கப்பட்டு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

2வது நாளாக இன்று ஆலோசனை
இந்நிலையில் தான் இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் மீண்டும் ஆலோசனைய துவக்கி உள்ளார். இன்று காலை 10.30 மணி முதல் மீண்டும் ராஜ்நாத் சிங் டெல்லியில் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

நேற்று நடந்தது என்ன?
முன்னதாக நேற்று முதற்கட்டமாக முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் விமானப்படை தலைமை தளபதி ஏர் சீப் மார்ஷல் விஆர் சவுத்ரி, ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவுக்கு பதில் துணை ராணுவ தளபதி பிஎஸ் ராஜூ பங்கேற்றார். இதில் அக்னிபாத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், சவால்கள் ஏற்பட்டால் அதனை சந்திப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications