"இட ஒதுக்கீடு.!" அமைச்சர் அமித் ஷா வெளியிட போகும் மிக முக்கிய அறிவிப்பு! கவனிக்கும் அரசியல் கட்சிகள்
டெல்லி: மத்திய அமைச்சர் அமித் ஷா இட ஒதுக்கீடு தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் அரசியல் ரீதியாக அங்குப் பெரியளவில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடைபெறாமலேயே இருந்தது.
அங்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தத் தொடங்கி உள்ள நிலையில், அதற்கான பணிகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாகத் தெரிவித்து உள்ளது.

அமித் ஷா
இந்தச் சூழலில் மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று திங்கள்கிழமை இரவு காஷ்மீர் செல்ல உள்ளார். அடுத்து இரு நாட்கள் காஷ்மீரில் தங்கும் அமித் ஷா, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். ரஜோரி மற்றும் பாரமுல்லா பகுதிகளில் நடக்கும் பொதுக்கூட்டங்களிலும் அவர் பேச உள்ளார். அமித் ஷா கலந்து கொள்ளும் நிகழ்வில் அதிகப்படியான மக்கள் பங்கேற்கக்கூடும் என்பதால் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

முக்கிய அறிவிப்பு
அமித் ஷா தனது இந்த காஷ்மீர் பயணத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அங்கு பஹாரி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பிரிவில் இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திப் போராடி வருகின்றனர். இந்தச் சூழலில் இது தொடர்பான அறிவிப்பைத் தான் அமித் ஷா தனது இந்த பயணத்தில் வெளியிட உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலைப்பாடு என்ன
இந்த எதிர்பார்ப்பு காஷ்மீரில் பல பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு முக்கிய கட்சிகளில் ஒன்றான தேசிய மாநாட்டுக் கட்சியில் இந்த விவகாரத்தில் இரு வேறு கருத்துகள் நிலவுகிறது. பஹாரி சமூகத்தினரை எஸ்டி பிரிவில் இணைக்கக் கூடாது என்றும் இது தங்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பாதிக்கும் என்றும் தேசிய மாநாட்டுக் கட்சியில் உள்ள குஜ்ஜார் பழங்குடியினர் இன்று போராட்டத்தையே நடத்தினர்.

ஆதரவு
அதேநேரம் அக்கட்சியிலேயே சிலர் இதற்கு ஆதரவும் தெரிவித்து உள்ளனர். இது குறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் கஃபீல் உர் ரஹ்மான், "நமது சமூகம் தான் அனைத்தையும் விட நமக்கு முக்கியம். அரசியல் எல்லாம் இதன் பிறகு தான். நாம் அனைவரும் அமைச்சரின் பேரணியில் கலந்துகொண்டு நமது பலத்தைக் காட்ட வேண்டும். இன்று நாம் எஸ்டி அந்தஸ்தை அடையவில்லை என்றால், அதை எப்போதும் பெற முடியாது" என்று அவர் தெரிவித்தார்.

காஷ்மீர் அரசியல்வாதிகள்
இவரைப் போலவே தேசிய மாநாட்டுக் கட்சியில் உள்ள பலரும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வெளிப்படையாக ஆதரித்து உள்ளனர். அதேநேரம் இது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இல்லை என்றும் தேசிய மாநாட்டுக் கட்சி தெளிவுபடுத்தி உள்ளது. வேறு சில அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அமைச்சர் பஹாரி சமூகத்தினரை எஸ்டி பிரிவில் இணைத்தால் அது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றே தெரிவித்து உள்ளனர்.

கவலை
அதேநேரம் பஹாரிகளுக்கு எஸ்டி அந்தஸ்து வழங்குவது அரசியல் ரீதியாகவும் காஷ்மீரில் பல மாற்றங்களைக் கொண்டு வரும். ஜம்மு காஷ்மீரில் குஜ்ஜார், பகர்வால் பழங்குடியினர் மற்றும் பஹாரிகளுக்கு இடையே ஏற்கனவே மோதல் நிலவும் நிலையில், அந்த பிளவை இந்த இட ஒதுக்கீடு அறிவிப்பு மேலும் ஆழப்படுத்த வாய்ப்பு உள்ளது. குஜ்ஜர்கள் மற்றும் பகர்வால்கள் அங்கு ஏற்கனவே எஸ்டி அந்தஸ்தை அனுபவித்து வரும் நிலையில், பஹாரிகளையும் எஸ்டியாக அங்கீகரிப்பது தங்கள் இட ஒதுக்கீட்டைப் பாதிக்கும் என்று அவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications