முடக்கி போடும் மூட்டு வலி.. ரத்தம் உறைய செய்த கடுங்குளிர்.. தடைகளை உடைத்தெறிந்த ராகுலின் பயணம்!
ராகுல் காந்தி தனது நெருங்கிய சகாக்களிடம் கனத்த குரலில் சொன்னது இதுதான். "மக்களை சந்திக்க ஆர்வமாக இருந்தேன். என் உடல் ஒத்துழைக்கவில்லை. கேரளாவைத் தாண்டுவதே சிரமம் என நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
டெல்லி: இந்தியாவின் தெற்கு எல்லையான கன்னியாகுமரியில் தொடங்கிய தனது 'பாரத் ஜோடோ' நடைப்பயணத்தைக் காஷ்மீரில் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார் ராகுல் காந்தி.
மொத்தம் 150 நாட்களாக 4,000 கிலோமீட்டர் ராகுல் காந்தி நடந்திருக்கிறார் என்ற செய்தியை மட்டும்தான் நம்மில் பலர் அறிந்திருப்போம். ஆனால், அந்த நடைப்பயணத்தின் போது ராகுல் எதிர்கொண்ட சவால்களும், வேதனைகளும் கொஞ்சம் நஞ்சம் அல்ல.
கடுமையான மூட்டு வலியும், உடலைக் குத்திக்கிழிக்கும் பனிக்காற்றும் ராகுலைப் பல முறை முடக்கிப் போட முயற்சி செய்தன. ஆனால், அவற்றை எல்லாம் கடந்து இந்த நடைப்பயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்திருப்பது உண்மையில் சாதாரண விஷயம் அல்ல. மூட்டு வலியுடன் 4,000 கி.மீ. நடப்பது என்பது மன உறுதியின் உச்சத்தில் இருக்கும் மனிதனால் மட்டுமே முடியும் என்பது மருத்துவர்களின் கூற்றாகவும் உள்ளது. பாரத் ஜோடோ யாத்திரை உடல் அளவிலும், மனதளவிலும் ராகுலுக்குக் கொடுத்த வலிகளை பற்றித்தான் இங்குப் பார்க்கப் போகிறோம்.

சோர்வடைந்த காங்கிரஸ் தொண்டர்கள்
கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற பெரும்பாலான தேர்தல்கள் காங்கிரஸுக்கு தோல்வியையே பரிசளித்து வந்தன. இது, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களை மனதளவில் கடுமையாகப் பாதித்தன. அவர்களை சோர்வடையவும் செய்தன. ஒரு கட்சிக்கு ஆணிவேராக விளங்கும் தொண்டர்கள் சோர்வடைவது என்பது அக்கட்சிக்கே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த ராகுல் காந்தி, அவர்களை உற்சாகப்படுத்தவும், அதே சமயத்தில் மக்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை உருவாக்கவும் அறிவித்ததே 'பாரத் ஜோடோ' யாத்திரை.

எள்ளி நகையாடிய விமர்சனங்கள்
ராகுல் காந்தி தனது நடைப்பயண அறிவிப்பை வெளியிட்டதுதான் தாமதம்.. நாலாபுறங்களில் இருந்தும் கிண்டலும், கேலியுமாக விமர்சனங்கள் பாய்ந்தன. அழிந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமாக முடிவுரை எழுதுவதற்காகவே ராகுலின் இந்த நடைப்பயணம் உதவும் என்றும், இந்த நடைப்பயணத்தால் ராகுலின் உடலுக்கு வேண்டுமானால் நன்மை ஏற்படுமே தவிரக் காங்கிரஸுக்கு எந்த ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை என்பன போன்ற விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் பாய்ச்சின.

முடக்க நினைத்த மூட்டு வலி..
ஆனால், இந்த விமர்சனங்களுக்கு ராகுல் காந்தி எந்த பதிலையும் அளிக்கவில்லை. புன்முறுவலுடன் அந்த விமர்சனங்களைக் கடந்து சென்றார். பின்னர், அறிவித்தபடி தனது நடைப்பயணத்தைத் தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கிய நடைப்பயணம் அடுத்த சில தினங்களில் கேரளாவுக்குள் நுழைந்தது. அப்போதுதான் அவருக்கு மூட்டு வலி ஏற்பட்டது. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு தொடர் சிகிச்சையால் மறைந்த மூட்டு வலி, மீண்டும் அவருக்கு வந்தது. அதுவரை எந்த எதிர்மறை விமர்சனங்களையும், தடங்கல்களையும் கலங்காத ராகுல் காந்தி முதன்முதலில் மனதளவில் உடைந்துவிட்டார். மூட்டு வலியின் வேதனை அவரை தொடர்ந்து நடக்க முடியாமல் செய்தன. தனது இந்த ரண வேதனையைக் கேரளாவில் வைத்து ராகுல் காந்தியே ஒருமுறை வேதனையுடன் பகிர்ந்தார்.

தடைகளைத் தகர்த்த குரான் வசனம்
அந்த சமயத்தில், அவர் தனது நெருங்கிய சகாக்களிடம் கனத்த குரலில் சொன்னது இதுதான். "மக்களைச் சந்திக்க ஆர்வமாக இருந்தேன். என் உடல் ஒத்துழைக்கவில்லை. கேரளாவைத் தாண்டுவதே சிரமம் என நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார். அப்போது, இது பற்றி எதுவும் தெரியாத 7 வயது சிறுமி, திடீரென ராகுலிடம் ஓடி வந்து தன் கைப்பட எழுதிய குரான் வசனத்தை ராகுலிடம் கொடுத்திருக்கிறாள். அதில், "கடினமான காலம் ஒன்று வந்தால் இன்பமான நாட்களும் சேர்ந்து வரும்" என்று எழுதப்பட்டிருந்தது. கடவுளே தனக்குக் கொடுத்து அனுப்பியதை போல இருந்த அந்த வாசகம் தான், ராகுலை மீண்டும் கிளர்ந்தெழச் செய்திருக்கிறது. மூட்டு வலியை பொருட்படுத்தாமல் தனது நடைப்பயணத்தைத் தொடர்ந்தார்.

புதிய அவதாரம் எடுப்பாரா ராகுல்?
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி, பஞ்சாப் என அனைத்து மாநிலங்களையும் மூட்டு வலியுடனே கடந்து சென்றார் ஆனால், ஒருமுறை கூட யாரிடமும் தனக்கு மூட்டு வலிக்கிறது என்று அவர் சொல்லவில்லை. இந்த மன உறுதிதான் டெல்லியில் நிலவிய உறை பனி குளிரையும் வெறும் டி ஷர்ட் அணிந்தபடி அவரை கடக்கச் செய்திருக்கிறது. மன வலிமை இருந்தால் உடல் அனுபவிக்கும் வேதனைகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பத்தைதான் ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணம் நமக்குச் சொல்லும் செய்தி. மூட்டு வலி உள்ள மனிதன் 10 நிமிடங்கள் தொடர்ந்து நடப்பதே மிகவும் சிரமமான காரியம் என்கிற போது, 4000 கிலோமீட்டர் ராகுல் காந்தி நடந்து முடித்திருப்பது உண்மையில் அசாத்தியமானதுதான். ராகுலின் உடலை மட்டுமல்ல மனதையும் இரும்பாக்கி இருக்கிறது இந்த நடைப்பயணம். இந்த இரும்பு மனதுடன் அடுத்த அரசியல் இன்னிங்ஸை தொடங்குவாரா ராகுல் காந்தி? பொறுத்திருந்து பார்ப்போம்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications