பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட போகாது.! சிந்து நதி ஒப்பந்தம் இனி நிரந்தரமாக இல்லை.. அமித் ஷா திட்டவட்டம்
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. மோதல் முடிந்தவுடன் மீண்டும் அந்த ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வரும் என்றே பாகிஸ்தான் நம்பி இருந்தது. ஆனால், மீண்டும் அந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்த எல்லாம் வாய்ப்பே இல்லை என அமித்ஷா திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
காஷ்மீரில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பாக 1960ல் இறுதியான ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இந்த ஒப்பந்தம் தான் இந்தியாவின் மூன்று நதிகளில் இருந்து பாகிஸ்தானின் 80% விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்தது. தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா அந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது.

இந்தியா நடவடிக்கை
பஹல்காம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருந்ததாகச் சொல்லியே இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளைப் பாகிஸ்தான் மறுத்துள்ளது. இருப்பினும், அதைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது. அதற்குப் பதிலடி தருகிறோம் எனச் சொல்லி பாகிஸ்தானும் இந்தியப் பகுதிகளில் தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும், பாகிஸ்தானால் தாக்க முடியவில்லை.
பாகிஸ்தான்
இதையடுத்து பாகிஸ்தான் வேறு வழியில்லாமல் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. அப்போது சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் என்றே பாகிஸ்தான் நினைத்தது. ஆனால், போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்ட இந்தியா சிந்து நதி ஒப்பந்தம் குறித்து எதுவும் சொல்லவில்லை. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நிறுத்தியே வைத்திருந்தது. இருப்பினும், விரைவில் இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் எனப் பாகிஸ்தான் நம்பி வந்தது. இது தொடர்பாக உலக அரங்கிலும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.
அமித்ஷா திட்டவட்டம்
இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து உள் துறை அமைச்சர் அமித்ஷா சில பரபர கருத்துகளைக் கூறியிருக்கிறார். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் ஒருபோதும் இந்தியா அமலுக்குக் கொண்டு வராது எனச் சொன்ன அவர், பாகிஸ்தானுக்குச் செல்லும் நீர் உள்நாட்டுப் பயன்பாட்டிற்காகத் திருப்பி விடப்படும் என்று தெரிவித்தார். பிரபல ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இதைக் குறிப்பிட்டார்.
ராஜஸ்தானுக்கு போகும்
அமித்ஷா கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்து மேலும் அமித்ஷா கூறுகையில், "இனி அந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படாது. பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்த தண்ணீரை ராஜஸ்தானுக்குத் திருப்பி விடுவதற்குக் கால்வாய் ஒன்றைக் கட்டுவோம். பாகிஸ்தானுக்கு அநியாயமாகச் சென்று கொண்டிருந்த தண்ணீர் நிறுத்தப்படும்" என்றார்.
அமித்ஷாவின் இந்த கருத்துக்கள், சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் மீண்டும் வரும் என்ற பாகிஸ்தானின் நம்பிக்கையை உடைப்பதாக இருக்கிறது. மேலும், சிந்து நதி நீரை இந்தியா எப்படிப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்பது குறித்தும் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாகப் பல கருத்துகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.
புலம்பும் பாகிஸ்தான்
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைபட்சமாக வெளியேறக் கூடாது என்றும் பாகிஸ்தானுக்குச் செல்லும் நதி நீரைத் தடுப்பது போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என்றும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க இந்தியா எடுத்த முடிவை எதிர்த்து சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் பாகிஸ்தான் ஆலோசனை செய்து வருகிறது.
இருப்பினும், இந்தியா தனது தாக்குதலில் திட்டவட்டமாகவே இருக்கிறது. கடந்த காலங்களில் போரே வந்த போதிலும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படவில்லை. ஆனால், இந்த முறை அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications