மோடி குறித்து ஒரே கேள்வி தான்.. அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சால் ஆடிப்போன அமித்ஷா.. உடனே தந்த விளக்கம்
டெல்லி: 75 வயதுக்கு பிறகு பதவியிலிருந்து விலக வேணடும் என்று பாஜகவின் சட்ட விதிகளில் எந்த விதியும் இல்லை.. எனவே பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக தொடருவார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். இன்று காலை பிரதமர் மோடி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பிய கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில், கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த இடைக்கா ஜாமீன் மனுவின் மீது நேற்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், "2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக ஏன் அவரை கைது செய்யவில்லை? தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தல் முடிந்த பிறகு கூட கைது செய்திருக்கலாம். தேர்தல் நேரத்தில் கைது செய்ததால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? எனவே ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்குகிறோம்" என தெரிவித்து ஜாமீன் வழங்கியது. இதன் காரணமாக நேற்று இரவே அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்நிலையில் இன்று காலை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், மோடி ஆம் ஆத்மி கட்சியை நசுக்க விரும்புகிறார் , அவருக்கு ஒரு தேசம், ஒரே தலைவர் என்ற ஆபத்தான மிஷன் இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றால், இன்னும் 2 மாதங்களில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மாற்றி விடுவார். தங்கள் கட்சியில் உள்ள அனைத்து பிரபலமான தலைவர்களின் அரசியல் வாழ்க்கையையும் முடிவுக்கு கொண்டுவர முயன்றுள்ளார. வசுந்தரா ராஜே, சிவராஜ் சௌஹான் போன்றவர்கள் தான் அதற்கு சிறந்த உதாரணம்.
வரும் செப்டம்பருடன் நரேந்திர மோடிக்கு 75 வயதாகிறது. 75 வயது நிரம்பியவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்ற விதியை பாஜகவில் வகுத்தவரே பிரதமர் மோடி தான். பாஜகவில் அடுத்த பிரதமராக உங்கள் பிரதமர் யார்? என்று நான் பா.ஜ.க-விடம் கேட்க விரும்புகிறேன். மோடியின் உத்தரவாதத்தை யார் நிறைவேற்றுவார்கள்? அதை அமித் ஷா நிறைவேற்றுவாரா? நீங்கள் (பாஜகவினர்) வாக்களிக்க வெளியே செல்லும்போது நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் அமித் ஷாவுக்கு வாக்களிக்க போகிறீர்கள், மோடிக்கு அல்ல..

ஜூன் 4-ம் தேதி பா.ஜ.க ஆட்சி அமைக்காது என்பது எனது கணிப்பு. பா.ஜ.க 220-230 இடங்களைப் பெறும் என்று நான் மதிப்பீடுகிறேன். இந்திய கூட்டணி ஆட்சி அமைக்கும், ஆம் ஆத்மி அந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும். டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவோம்" என்று கெஜ்ரிவால் கூறினார்..
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பேச்சால் பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. பாஜகவை பற்றியே அவர் இன்று முழுமையாக பேசி, பல்வேறு விவாதங்களை கிளம்பிவிட்டதற்கு பதிலும் தந்திருக்கிறது அக்கட்சியின் தேசிய தலைமை.. தெலுங்கானாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சுக்கு அளித்த பதிலில், "75 வயதுக்கு பிறகு பதவியிலிருந்து விலக வேணடும் என்று பாஜகவின் சட்ட விதிகளில் எந்த விதியும் இல்லை.. எனவே பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக தொடருவார். அடுத்த ஐந்து ஆண்டும் நரேந்திர மோடியே பிரதமராக தொடருவார். கட்சியில் எந்த குழப்பமும் இல்லை" என்று கூறினார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications