நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்.. மே 4 ஆம் தேதி தேர்வு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
டெல்லி: எம்பிபிஎஸ், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 4 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளது.
எம்பிபிஎஸ்., மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான நீட் எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மிகப்பெரிய நுழைவுத் தேர்வாகக் கருதப்படும் நீட் தேர்வை மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இளநிலை நீட் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். 2025 ஆம் ஆண்டு இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு துவங்கப்பட்டுள்ளதாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 7 ஆம் தேதி நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. இத்தேர்வுக்கு பதிவு செய்ய மார்ச் 7 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மார்ச் 7 ஆம் தேதி தேர்வுக் கட்டணம் செலுத்தவதற்கான கடைசி நாளாகும். மே 1 ஆம் தேதி தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்படவுள்ளது.
இளநிலை நீட் தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறவுள்ளது. மதியம் 2:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கு பொதுப் பிரிவு மாணவர்கள் ரூ. 1,700, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் ரூ.1,600, எஸ்சி/எஸ்டி/3ம் பாலினத்தவர்கள்: ரூ.1000 மற்றும் வெளிநாட்டினர் ரூ.9,500 தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications