மரணம் உங்களை நெருங்குகிறது.. நீங்கள் தினமும் எவ்வளவு நேரம் தூங்குவீர்கள்? இந்த ஆய்வு முடிவை பாருங்க
டெல்லி: ஒருவருக்கு தினமும் 8 மணிநேரம் தூக்கம் அவசியம். ஆனால் ஒருதரப்பினர் 8 மணி நேரத்துக்கு குறைவாகவும், சிலர் 8 மணி நேரத்துக்கு அதிகமாகவும் தூங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் தான் தினமும் 7 மணி நேரத்திற்கும் குறைவாகவும், 9 மணி நேரத்திற்கும் அதிகமாகவும் தூங்குபவர்களின் ஆயுட்காலம் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுவர், சிறுமிகள் முதல் முதியவர், மூதாட்டி வரை அனைவருக்கும் தூக்கம் என்பது அவசியம். தூக்கம் என்பது நம்மை மூளையை ஓய்வெடுக்க செய்து உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. இதனால் தினமும் 8 மணிநேரம் தூங்குவது அவசியம். குறிப்பாக காலை நேரங்களில் தூங்குவதை விட இரவில் 8 மணிநேரம் தூங்குவது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இன்றைய வாழ்க்கை சூழலில் தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. ஒரு சிலர் 8 மணிநேரத்துக்கு குறைவாகவும், இன்னும் சிலர் 8 மணிநேரத்துக்கு அதிகமாகவும் தூங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இன்னும் சிலர் வாரம் நாட்களில் சரியாக தூங்காமல் வார இறுதி நாட்களிலும் பகல் முழுவதும் தூங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் தான் தற்போது ஒரு ஆய்வில் அதிர்ச்சி முடிவு வெளியாகி உள்ளது. தூக்கம் தொடர்பான
79 கூட்டு ஆய்வுகளை ஒருங்கிணைத்து இந்து முடிவு வெளியிடப்பட்டுள்ளது. PubMed-ல் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவு வெளியாகி உள்ளது. அதில், ஒருவர் தினமும் 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். மாறாக 7 மணி நேரத்துக்கு குறைவாகவும், 9 மணிநேரத்துக்கு அதிகமாகவும் தூங்குவோரின் ஆயுட்காலம் குறைகிறது.
அதன்படி தினமும் 7 மணிநேரத்துக்கும் குறைவாக தூங்குவோருக்கு இறப்பு ஆபத்து 8 மணிநேரம் தூங்குபவரை ஒப்பிடும்போது 14 சதவீதம் அதிகமாக உள்ளது. அதேபோல் 9 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தூங்குவோருக்கு இறப்பு ஆபத்து 34 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் அதிக நேரம் தூங்குவோரில் ஆண்களை விட பெண்களுக்கே இறக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
தூக்கம் நம் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உடலுக்கு ஓய்வு மட்டுமின்றி நினைவாற்றல், மனநிலையை சீராக வைப்பது, வளர்சிதை மாற்றத்தைமுறையாக வைப்பது, இதய ஆரோக்கியம் உள்ளிட்டவற்றுக்கு தூக்கம் முக்கியமானதாகும். மாறாக தூக்கமின்மை என்பது உடலில் ரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இதயத்துக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கிறது. இது உடல் உபாதைகளை ஏற்படுத்தி இறப்புக்கு அழைத்து சென்றுவிடும்.
அதேபோல் அதிகப்படியான தூக்கம் உடல் பருமனை அதிகரிக்கும். அறிவாற்றல், சிந்திக்கும் திறன் உள்ளிட்டவற்றை குறைக்கும். எனவே, தினமும் 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications