Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சந்து நியமனம்! வெளியானது அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள 2 தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட தேர்வு வாரிய கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, இருவரையும் தேர்தல் ஆணையர்களாக நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை ஒரு தலைமை ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் இருப்பார்கள். தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பு வகித்து வருகிறார்.

Arun Goel Resigns PM Modi led selection panel to meet today and pick 2 election commissioners for Indian election Commission

அதேபோல் தேர்தல் ஆணையராக அருண் கோயல் இருந்தார். இன்னொரு தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஓய்வு பெற்றார். இதனால் ஒரு தேர்தல் ஆணையர் பொறுப்பு காலியாக இருந்தது. லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அருண் கோயல் ஆகியோர் பணிகளை தேர்வு மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலைில் தான் திடீரென்று அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கடந்த 9 ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் வழங்கினார். ஜனாதிபதி திரெளபதி முர்மு அவரது கடிதத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் இந்திய தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்து அருண் கோயல் விலகி உள்ளார். அவரது திடீர் ராஜினாமாவுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும், அருண் கோயலுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு தான் காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் திட்டமிட்டப்படி மே மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்படுமா? இல்லாவிட்டால் தள்ளிப்போகுமா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் இரண்டு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 3 பேர் கொண்ட உயர்மட்ட தேர்வு வாரியத்தின் கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண் மேக்வால் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் அடங்கிய குழு இந்திய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு கூட்டம் நடக்கும் என கூறப்பட்ட நிலையில் நேரம் மாற்றம் செய்ப்பட்டது. மதியம் 12 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.

இந்நிலையில் தான் காலியாக உள்ள இந்திய தேர்தல் ஆணையர் பொறுப்புக்கு மொத்தம் 11 பேரின் பெயர்கள் முன்னிலையில் இருந்தது. அதன்படி மூத்த அதிகாரி தருண் பஜாஜ், முன்னாள் உத்தர பிரதேச தலைமை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா, முன்னாள் பஞ்சாப் தலைமை செயலாளர் வினி மகாஜன், கேரளாவை சேர்ந்த ஞானேஷ் குமார், பஞ்சாப்பை சேர்ந்த சந்து, முன்னாள் யூஐடிஏஐ (ஆதார்) தலைவர் ராஜேஷ் பூஷண், முன்னாள் அமலாக்கத்துறை தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ரா, முன்னாள் சிபிடிடி தலைவர் பிசி மோடி, ஜேபி மோபத்ரா, முன்னாள் என்ஐஏ தலைவர் தினகர் குப்தா மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ராதா எஸ் சவுகான் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருந்தன.

இவர்களில் 2 பேர் தான் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக நியமனம் செய்ப்பட்டுள்ளன. அதன்படி கேரளாவை சேர்ந்த ஞானேஷ் குமார், பஞ்சாப்பை சேர்ந்த சந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனை பிரதமர் மோடி தலைமயைிலான உயர்மட்ட குழுவில் இடம்பெற்றிருந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உறுதி செய்துள்ளார். இவர்கள் 2 பேரின் பெயர்களும் ஜனாதிபதி திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி திரெளபதி முர்மு 2 பேரின் பெயர்களுக்கும் இன்று மாலையில் ஒப்புதல் அளித்துள்ளார். தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சந்து ஆகியோரின் நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+