ஆர்யன் கான் வழக்கை விசாரித்து.. சர்ச்சையில் சிக்கிய அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிடமாற்றம்!
டெல்லி: ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் விசாரணை நடத்திய போதைப்பொருள் அதிகாரி சமீர் வான்கடே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக். மாதம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பார்டி நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டன.
சமீபத்தில் தான் இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கான் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், விசாரணை சமயத்தில் இந்த வழக்கில் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வந்தது.

சமீர் வான்கடே
இந்தச் சூழலில் போதைப்பொருள் வழக்கில் இருந்து ஆர்யன்கானை விடுவிக்க என்சிபி அதிகாரிகள் ஷாருக் கானிடம் பேரம் பேசியதாகவும் இதில் மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கும் தொடர்பு இருப்பதாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவர் ஆர்யன் கான் வழக்கிலிருந்து நீக்கப்பட்டு, மும்பை என்.சி.பி., தலைமையகத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

சென்னைக்கு மாற்றம்
மேலும், மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்த வந்த 6 கேஸ்களும் என்சிபி உயர் அதிகாரி சஞ்சய் சிங் தலைமையிலான சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. சமீபத்தில் ஆர்யன் கானும் போதைப்பொருள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை முறையாக விசாரிக்கத் தவறிய முன்னாள் என்சிபி அதிகாரி சமீர் வான்கடே சென்னையில் உள்ள வரி சேவை இயக்குநரகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மத்திய அரசு
இவர் மீது போலி சாதி சான்றிதழை அளித்து வேலைக்குச் சேர்ந்ததாகவும் புகார் உள்ளது. இதனிடையே போதைப்பொருள் வழக்கு விசாரணையை முறையாக நடத்தத் தவறி வான்கடே மீது நடவடிக்கை எடுக்குமாறு சமீபத்தில் மத்திய அரசு நிதி அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டு இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் இப்போது சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆர்யன் கான் வழக்கில் இவரது விசாரணையில் 5 முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஐந்து பிழைகள்
முதலில் சொகுசு கப்பலில் தேடுதல் வேட்டையின்போது வீடியோ பதிவு செய்யப்படவில்லை. மேலும், ஆர்யன் கானின் மொபைலை ஆய்வு செய்வதிலும் முறையான விதிகள் பின்பற்றப்படவில்லை. அடுத்து கைது செய்யப்பட்டோர் போதைப் பொருட்களை எடுத்துக் கொண்டனரே என்பதை நிரூபிக்க மருத்துவ சோதனைகள் செய்யப்படவில்லை.

முக்கிய பிரச்சினை
மேலும் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சிலர் பிறழ் சாட்சியாக மாறினர். இவை அனைத்தையும் விட ஆர்யன் கான் போதைப்பொருள் இல்லாமல் கைது செய்யப்பட்ட போதிலும், குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீது ஒரே மாதிரியான வழக்குக்குள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இந்த 5 காரணங்கள் தான் போதைப்பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கான் விடுதலையாக முக்கியமாக அமைந்து இருந்தது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications