35 நிமிடங்கள் நடந்த டிரோன் அட்டாக்.. ஒன்றை கூட மிஸ் செய்யாமல் அடித்த எஸ்400.. அதிர்ந்த பாகிஸ்தான்!
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர்-க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய டிரோன் சுமார் 35 நிமிடங்கள் வரை நீடித்திருப்பது தெரிய வந்துள்ளது. ஜம்மு, பதான்கோட், உதம்பூர், ஆர்எஸ் புரா, அர்னியா, பூன்ச் உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்ற டிரோன் தாக்குதலை எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பு மூலமாக இந்தியா முறியடித்துள்ளது. ஒரு டிரோன் கூட இந்திய மண்ணிற்குள் நுழையவிடாமல், வானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாக காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் நேற்று முன்தினம் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இருந்த பயங்கரவாதிகள் முகாமை இந்திய ராணுவம் அழித்தது.

இந்தியாவின் பதிலடியால் கலங்கி போன பாகிஸ்தான், நேற்றிரவு திடீரென எல்லையோர மாவட்டங்களில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக தாக்குதலை நடத்த தொடங்கியது. அதேபோல் ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூரில் உள்ள ராணுவ தளங்களை குறி வைத்து டிரோன் தாக்குதலையும், ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் ஏவுகணை மூலமாகவும் தாக்குதலை தொடங்கியது.
இன்னொரு பக்கம் ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தையும் குறி வைத்தது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்திய பாதுகாப்பு படை அலர்ட்டானது. எஸ்400 சுதர்சன் சக்ரா வான் பாதுகாப்பு அமைப்பு உடனடியாக செயல்பாட்டுக்கு வந்தது. இதன் மூலமாக ஒரே நேரத்தில் 300 இலக்குகளை தாக்க முடியும்.
இதனால் எஸ்400 மூலமாக பாகிஸ்தான் ராணுவம் அனுப்பிய டிரோன்களை வானிலேயே சுட்டு வீழ்த்தியது. அதேபோல் 8 ஏவுகணைகளையும் முறியடித்து. இங்கு மட்டுமல்லாமல் ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, அர்னியா, பூன்ச் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த டிரோன் தாக்குதல் மொத்தமாக 35 நிமிடங்கள் வரை நீடித்தது தெரிய வந்துள்ளது.
இந்திய ராணுவத்திற்கு எந்தவித உயிர் இழப்போ, பொருள் இழப்போ ஏற்படவில்லை. இந்த 35 நிமிடங்கள் இந்தியா பாதுகாப்பு படை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய நிலையில், அடுத்த சில நிமிடங்களில் பாகிஸ்தான் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக தாக்குதலை இந்தியா தொடங்கியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையில் அறிவிக்கப்படாத போர் தொடங்கியதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications