டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாணவர்களின் கல்வியாண்டை வீணடிக்கக் கூடாது.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Google Oneindia Tamil News

டெல்லி: மாணவர்களின் கல்வியாண்டை வீணடிக்கக் கூடாது, அதை காக்க வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் சமயத்தில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை மத்திய அரசு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. 7 மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளன.

Aswini Kumar Choubey condemns opposition leaders in Neet issue

இந்த நிலையில் இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறுகையில் கொரோனா பீதியால் நீட் தேர்வை ஒத்தி வைக்குமாறு எதிர்க்கட்சிகள் கூறுவதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமானது. எனவே தேவையற்ற ஆட்சேபணைகளை தெரிவிக்க வேண்டாம். நீட் தேர்வு குறித்து தேவையற்ற கவலையை உருவாக்கும் எதிர்க்கட்சிகள் சற்று மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்தை நினைத்து பார்க்க வேண்டும்.

மாணவர்களின் நலனுடன் விளையாடி யாரும் பலனடைய முடியாது. எனவே அரசியல் கட்சிகளுக்கு ஒன்றை வலியுறுத்திக் கொள்கிறேன், தேவையில்லாத பிரச்சினைகளை எழுப்பாதீர்கள். நீட் தேர்வில் ஓராண்டு ஒத்தி வைத்துவிட்டால் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மருத்துவர்களை நம்மால் உருவாக்க முடியாது.

நீட் ஜெஇஇ தேர்வு...விபரீத புத்தி...பிரதமர் தவறா... சுப்ரமணியன் சுவாமி ட்வீட்!! நீட் ஜெஇஇ தேர்வு...விபரீத புத்தி...பிரதமர் தவறா... சுப்ரமணியன் சுவாமி ட்வீட்!!

Recommended Video

    India மாணவர்களுக்காக குரல் கொடுத்த Greta Thunberg | OneIndia Tamil

    எனவே நாட்டின் நலன் கருதியும் மாணவர்களின் நலனுக்காகவும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அரசு என்ன முடிவு எடுத்தாலும் அது உங்கள் (மாணவர்கள்) நலனுக்கானது என்பதை புரிந்து கொள்ளுங்கள். தேசிய அளவில் தேசிய தேர்வுகள் முகமை தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறுவோர் வருங்காலத்தில் நல்ல மருத்துவர்களாகவோ என்ஜீனியர்களாகவோ உருவாக வாய்ப்புள்ளது என்றார் சவுபே.

    English summary
    NEET: Minister Ashwini Kumar Choubey asks opposition leaders not to politicise and raise issues which is against to students intereests.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X