அட்லஸ் சைக்கிள் நிறுவனரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை.. டெல்லியில் அதிர்ச்சி
டெல்லி: புகழ் பெற்ற அட்லஸ் சைக்கள் நிறுவன உரிமையாளர் சஞ்சய் கபூரின் மனைவி நடாஷ், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா முழுவதும் புகழ் பெற்ற சைக்கிள் நிறுவனம் அட்லஸ். 70 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்த நிறுவனத்தின் சைக்கிள்கள் தான் பல இடங்களில் நிறைந்த காண்ப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சய் கபூர். இவர் தனது நடாஷ் கபூர் (57) உடன் டெல்லியின் போஸ் அவுரங்கஷிப் பகுதியில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் சஞ்சய் கபூர் இல்லாத நேரம் பார்த்து நடாஷ் கபூர் திடிரென வீட்டின் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் நடாஷின் உடலை மீட்டு கங்கா ராம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்ட்டது. இதையடுத்து சஞ்சய் கபூரின் குடும்பத்தினர் நடாஷின் உடலை லோதி சாலையில் அமைந்துள்ள ஒரு தகனத்தில் தகனம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தற்கொலை நடந்த போது நடாஷிவின் மகள் மற்றும் மகன் வீட்டில் தான் இருந்திருக்கிறார்கள். நடாஷ் தற்கொலை செய்து கொள்ளும் முன் எழுதிய கடிதத்தில் தன் தங்கையை குடும்பத்தார் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ளார்.
இதனிடையே அட்லஸ் உரிமையாளரின் மனைவி தற்கொலை சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications