மனைவியுடன் நெருக்கம்.. சிக்கிய இளைஞர்.. கணவர் கண்ட காட்சி.. 15 துண்டுகளாக வெட்டி வீசிய ஆட்டோ டிரைவர்
டெல்லி: தனது மனைவியுடன் இளைஞர் ஒருவர் நெருக்கமாக பழகியதால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் அவரை கொலை செய்து 15 துண்டுகளாக வெட்டி குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே டெல்லியில் தனது காதலியை இளைஞர் ஒருவர் 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்தார். இந்த சம்பவம் தந்த அதிர்ச்சி ஓய்வதற்குள்ளாக பல மாநிலங்களில் அதே பாணியில் பலர் கொலை செய்யப்பட்டனர்.
அந்த வகையில், தற்போது உத்தரபிரதேசத்திலும் அதுபோன்ற ஒரு பயங்கர சம்பவம் நடந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இளைஞருடன் பழக்கம்
உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்தவர் மீலால் பிரஜாபதி (40). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். இதனிடையே, அதே பகுதியில் அக்சய் குமார் (23) என்ற இளைஞர் அண்மையில் குடிவந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே அக்சய் குமாரும், மீலால் பிரஜாபதியின் மனைவியும் நெருங்கி பழகி வருவதாக அக்கம்பக்கத்தினர் மீலால் பிரஜாபதியிடம் கூறியுள்ளனர்.

"பழக்கத்தை விட்டுவிடு"
இதையடுத்து, அவர்கள் இருவரையும் ரகசியமாக மீலால் பிரஜாபதி கவனிக்க தொடங்கினார். இதில் அவர்கள் இருவரும் பல முறை தனிமையில் உல்லாசமாக இருப்பதை பிரஜாபதி நேரில் பார்த்துள்ளார். இதையடுத்து, அக்சய் குமார் உடனான பழக்கத்தை கைவிட்டுவிடுமாறு அவரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. எனினும், அக்சய் குமாருடன் பழகுவதை பிரஜாபதியின் மனைவி நிறுத்திக்கொள்ளவில்லை.

15 துண்டுகளாக..
இந்த சூழலில், கடந்த 19-ம் தேதி பிரஜாபதியின் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிரஜாபதியின் மனைவி உடனிருந்து மகளை கவனித்து வந்தார். இந்த விஷயம் தெரியாமல் பிரஜாபதியின் மனைவியை பார்க்க அக்சய் குமார் நேற்று முன்தினம் வந்துள்ளார். அப்போது வீட்டில் பிரஜாபதி இருப்பதை பார்த்த அவர், அங்கிருந்து செல்ல முயன்றார். இதையடுத்து, அக்சய் குமாரை மடக்கிப் பிடித்த பிரஜாபதி, அவரை சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த பிரஜாபதி, அவரது உடலை 15 துண்டுகளாக வெட்டி 3 பைகளில் எடுத்துச் சென்று கோடா புஸ்டா பகுதியில் உள்ள குப்பைகளில் வீசினார்.

கைது நடவடிக்கை
இந்நிலையில், நேற்று குப்பைகளை தெரு நாய் கிளறிய போது, மனித உடல் பாகங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து போலீஸாருக்கு புகார் தெரிவித்தனர். இதன்பேரில் போலீஸார் அங்கு வந்து உடல் பாகங்களை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டது அக்சய் குமார் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் விசாரணை நடத்திய போலீஸார் பிரஜாபதியை கைது செய்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications