டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அயோத்தி: உச்சநீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்கும் திருப்தி தரவில்லை என்றால் அடுத்து என்ன? செம ட்ரிக்ஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    Ayodhya Case May End Today | பாபர் செய்தது வரலாற்று பிழை சுப்ரீம் கோர்ட்டில் இந்து தரப்பு வாதம்

    டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி கட்ட விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, உத்தரப் பிரதேச மாநில உயர்நீதிமன்றமான, அலகாபாத் ஹைகோர்ட், 2010 ஆம் ஆண்டு இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பில், 2:1, என்ற அடிப்படையில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் வழக்கில் தொடர்புள்ள மூன்று மனுதாரர்களுக்கும பகிர்ந்தளிக்கப்பட்டது. நிர்மோகி அகாரா, ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் ஆகியவை இந்த வழக்கின் மனுதாரர்களாகும்.

    Ayodhya Case: What happens if both Hindus and Muslims are unhappy with the verdict

    உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் திருப்தியில்லை என்பதால்தான் உச்ச நீதிமன்றத்தில் மூன்று தரப்புமே மேல்முறையீடு செய்துள்ளது. அயோத்தி வழக்கு விசாரணை 40வது நாளான இன்று விசாரணைக்கு வருகிறது.

    அடுத்த மாதம் 17ம் தேதியுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வுபெற உள்ளதால் அதற்கு முன்பாக தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், ஒருவேளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்து மற்றும் முஸ்லிம் தரப்புக்கு சமாதானம் தரவில்லை, அதாவது அதை அவர்கள் ஏற்கவில்லை என்றால் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது தொடர்பாக சட்ட வல்லுனர்களிடம் நாம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது,: ஒருவேளை இருதரப்புக்கும் இந்த தீர்ப்பில் மகிழ்ச்சி ஏற்படவில்லை என்றால், மத்திய அரசின் கையில்தான் முடிவெடுக்கும் அதிகாரம் சென்று சேரும். அவசர சட்டம் வாயிலாக சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க முடியும்.

    அயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணைஅயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை

    பாஜகவில் உள்ள மூத்த தலைவர்கள் பலரும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று மறுபடி மறுபடி சொல்லி வருவதை பார்த்தால், அவசர சட்டம் இந்து தரப்புக்கு ஆதரவாக தான் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து அமைப்புகளுக்கு சொந்தம் எனக்கூறி அதில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவெடுக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக, 'ஒன் இந்தியாவிடம்' பேசிய மூத்த வழக்கறிஞர் கே.என்.பனிந்திரா கூறுகையில், "எந்த தரப்புக்கும் தீர்ப்பில் திருப்தி இல்லை என்று கூறினால், அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசுக்கு எந்த தடையும் கிடையாது. அப்படி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமலுக்கு வராது. ஆனால் அந்த அவசர சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்" என்றார்.

    English summary
    The verdict in the Ayodhya Case could be delivered in the next one month. None of the parties are willing to settle for anything less and attempts to mediate the dispute have failed on several occasions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X