டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தி.. ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை.. பிரதமர் மோடிக்கு அழைப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி வழக்கு முடிவடைந்து தீர்ப்பு வந்துள்ள நிலையில் இதுவரை நான்கு முறை அங்கு ராமர் கோவில் கட்டுவது தொடர்பான மீட்டிங் நடந்துள்ளது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு சார்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று மாலையும் இது தொடர்பான மீட்டிங் நடைபெற்றது.

Ayodhya: PM Modi called for Bhoomi Puja by Shri Ram Janmabhoomi Teerth Trust

இந்த ஆலோசனையில் அயோத்தியில் கட்ட இருக்கும் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை எப்போது நடத்தப்படலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டது. அதன்படி கோவிலுக்கான பூமி பூஜையை ஆகஸ்ட் 3 அல்லது 5ம் தேதி செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்கு பிரதமர் மோடியை அழைக்க அந்த குழு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடியின் முடிவை பொறுத்து இரண்டில் ஒருநாள் தேர்வு செய்யப்படும் என்று கூறுகிறார்கள். இதன் மூலம் அயோத்தியில் அந்த குறிப்பிட்ட பகுதிக்கு பிரதமர் மோடி முதல்முறை செல்ல வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

அரசின் கோழைத்தனம்.. லடாக்கில் இந்தியா பெரிய விலைகொடுக்க போகிறது.. ராகுல் காந்தி கருத்து!அரசின் கோழைத்தனம்.. லடாக்கில் இந்தியா பெரிய விலைகொடுக்க போகிறது.. ராகுல் காந்தி கருத்து!

இந்த பூமி பூஜைக்கு பின் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று கூறுகிறார்கள். ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு கடந்த பிப்ரவரி 5ம் தேதி தொடங்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பை தொடங்கி வைத்தார்.

ஜாதக முறைப்படி இந்த இரண்டு நாட்களை தேர்வு செய்து இருப்பதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது இந்த கோவிலை கட்டுவதற்கான ஆய்வு பணிகள் அங்கு நடந்து வருகிறது. அங்கு மண் ஆய்வு பணிகளை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு செய்து வருகிறது. இதற்கான நிதி தற்போது மக்களிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது.

Recommended Video

    ராமர் குறித்து கருத்து.. திடீரென பின்வாங்கிய நேபாளம்

    இந்த ராமர் கோவில் கட்டுமானம் 3 -3.5 வருடத்தில் முடியும் என்று கூறுகிறார்கள். இதற்கான விழா பெரிய அளவில் நடக்கும் என்று கூறுகிறார்கள்.

    கடந்த வருடம் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்க வேண்டும், என்று தீர்ப்பு வழங்கியது.

    English summary
    Ayodhya: PM Modi called for Bhoomi Puja by Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X