பாபா ராம்தேவிற்கு நெருக்கம்.. பதஞ்சலி "டயரி" நிறுவன சிஇஓ கொரோனாவால் பாதிக்கப்பட்டு.. உயிரிழப்பு!
டெல்லி: பதஞ்சலி நிறுவனத்தின் பால் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோக பிரிவின் சிஇஓ சுனில் பன்சால் கொரோனா காரணமாக பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா காரணமாக மரணங்கள் ஏற்பட அலோபதி மருத்துவம்தான் என்ற முத்தை உதிர்த்தவர் பதஞ்சலி நிறுவனத்தின் பாபா ராம்தேவ். கொரோனாவிற்கு கொடுக்கப்படும் மருந்துகளால்தான் மக்கள் இறக்கிறார்கள்.. நமக்கு எதுக்கு ஆக்சிஜன் சிலிண்டர், மூக்குதான் ஆக்சிஜன் சிலிண்டர் என்று அலோபதி மருத்துவத்தை மோசமாக விமர்சித்தவர்தான் பாபா ராம்தேவ்.
இவருக்கு எதிராக இந்திய மருத்துவ கழகம் சார்பாக சுகாதாரத்துறையிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஷர்ஷ் வர்தனும் பாபா ராம்தேவ் பேச்சை விமர்சனம் செய்து இருந்தார்.

எப்படி
இந்த நிலையில் அலோபதி மருத்துவத்தை கிண்டலடித்து வந்த பாபா ராம்தேவ் தற்போது தனது நிறுவன சிஇஓவையே கொரோனாவிற்கு பறிகொடுத்துள்ளார். பதஞ்சலி நிறுவனத்தின் பால் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோக பிரிவின் சிஇஓ சுனில் பன்சால் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரின் நுரையீரல் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது.

பாதிப்பு
மூளைக்கு செல்லும் ரத்தமும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தது. எக்மோ உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த சிஇஓ சுனில் பன்சால் இன்று சிகிச்சை பலனின்றி பலியானார். பதஞ்சலி நிறுவனம் பால் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகத்தை 2018ல் தொடங்கியது. அப்போதில் இருந்தே சுனில் பன்சால்தான் இதன் சிஇஓ.

நெருக்கம்
பாபா ராம்தேவிற்கு மிக நெருக்கம். கொரோனாவை எளிதாக எதிர்கொள்ளலாம், மூக்கிலேயே ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளது என்றெல்லாம் பாபா ராம்தேவ் மக்களை தவறாக வழி நடத்திக்கொண்டு இருந்த நிலையில், அவருக்கு நெருக்கமானவரே கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அதுவும் சுவாசிக்க முடியாமல், நுரையீரல் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளார்.

கொரோநில்
இதே பாபா ராம்தேவ்தான் சில நாட்களுக்கு முன் கொரோனாவை குணப்படுத்தும் மருந்து என்று கொரோநில் மருந்தை வெளியிட்டார். பின்னர் இதன் லைசன்ஸ் நீக்கப்பட்ட நிலையில், கொரோனாவிற்கு எதிரான இம்யூன்ட்டி பூஸ்டர் என்று பெயர் மாற்றி வெளியிட்டார். மக்களை இப்படி பாபா ராம்தேவ் தவறாக வழிநடத்திய நிலையில் அவரின் நெருக்கிய நிர்வாகியே கொரோனாவிற்கு பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications