"நெருங்கும் பேரழிவு.." நிஜமாகும் பாபா வங்கா கணிப்புகள்.. லிஸ்ட் மோசம்! இந்தியாவுக்கான கணிப்பு என்ன?
டெல்லி: வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து துல்லியமாகக் கணிப்புகளைச் செய்பவர் பாபா வங்கா. இவரது கடந்த காலக் கணிப்புகள் பல உண்மையாகியுள்ளன. இந்தாண்டும் கூட அவரது பல கணிப்புகள் உண்மையாகி வரும் நிலையில், அவரது முக்கியமான கணிப்புகள் குறித்து நாம் பார்க்கலாம். அவரது பல முக்கிய கணிப்புகள் உலகெங்கும் பல வகைப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதால் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
1911ல் பிறந்த பாபா வங்கா அவரது 12 வயதில் கண் பார்வையை இழந்தார். ஆனால், அதன் பிறகே அவர் எதிர்காலத்தைப் பார்க்கும் திறனைப் பெற்றார். அவர் தனது வாழ்நாளில் பல கணிப்புகளைச் செய்துள்ள நிலையில், அதில் பல கணிப்புகள் உண்மையாகியுள்ளன. 1996ம் ஆண்டு பாபா வங்கா மறைந்தாலும் அவருடைய கணிப்புகள் உலகெங்கும் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.

பாபா வங்கா
பாபா வங்கா கடந்த காலத்தில் கூறிய பல கணிப்புகள் உண்மையாகியுள்ளன. குறிப்பாக உலகை அதிர வைத்த 9/11 தாக்குதல் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வெற்றி போன்ற கணிப்புகள் குறிப்பிடத்தக்கவை. இதன் காரணமாகவே எப்போதும் பாபா வங்கா குறித்த செய்திகள் மக்களிடையே கவனம் பெற்று வருகிறது. இந்தாண்டும் கூட அவர் சில கணிப்புகளைச் செய்திருக்கும் சூழலில், அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பேரழிவு ஏற்படும்
இந்தாண்டு அவரது முக்கிய கணிப்புகளில் ஒன்று ஆசியாவில் பேரழிவை ஏற்படுத்தும் பூகம்பம் மற்றும் சுனாமி தொடர்பானதாகும். எந்த தேதியில் ஏற்படும் என்பது குறித்து எந்தவொரு கணிப்பையும் பகிரவில்லை என்றாலும் இந்தாண்டுக்குள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது. பசிபிக் பகுதியில் உள்ள ரிங் ஆஃப் பையர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வரும் பூகம்ப நடவடிக்கைகள் மற்றும் கடல் வெப்பநிலை உயர்வு பாபா வங்காவின் கணிப்புகளுக்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது. இதனால் இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் சற்று அச்சத்துடனேயே இருக்கிறார்கள்.
அடுத்து முக்கியமானது உலக பொருளாதாரம் தொடர்பானது. இந்தாண்டு உலக பொருளாதாரம் மிக மோசமாகச் சரிவடையும் எனப் பாபா வங்கா கணித்திருக்கிறார். உலகின் முக்கிய நிதிச் சந்தைகள் சரியும் என்றும் வேலையின்மை மற்றும் வறுமை அதிகரிக்கும் என்றும் பாபா வாங்கா கணித்திருக்கிறார். பணவீக்கம், உலக நாடுகளின் கடன்கள் அதிகரிப்பது, நிலையற்ற மார்கெட் காரணமாக உலகப் பொருளாதாரம் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இது பாபா வங்காவின் கணிப்புகள் உண்மையாகி வருவதையே குறிக்கிறது.
ஏலியன் தொடர்பு
அதேபோல இந்தாண்டு நிச்சயம் மனிதர்கள் ஏலியன்களை தொடர்பு கொள்வார்கள் என அவர் கணித்துள்ளார். சிலருக்கு இது வினோதமானது போல தெரிந்தாலும் உண்மையில் இதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே இருக்கிறது. பல நாடுகளின் ராணுவம் மற்றும் அரசு ஏஜென்சிகள் அடையாளம் தெரியாத வான் நிகழ்வுகளைக் கண்டறிந்துள்ள நிலையில், இதில் முக்கிய மாற்றங்கள் நடக்கலாம்.
அதேபோல புதிய வினோதமான நோய்ப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பிருப்பதாகப் பாபா வங்கா கணித்துள்ளார். இதுவரை பெரிய நோய் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும் இந்தப் பாதிப்பு நொடியில் ஏற்படும் ஆபத்து இருக்கவே செய்கிறது. சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் நோய்க்கிருமிகளின் பிறழ்வு காரணமாக இது நிகழலாம் என்றே பலரும் கருதுகின்றனர்.
மருத்துவத் துறை
மருத்துவத்திலும் சில முக்கிய மாற்றங்களைக் கணித்துள்ளார். அதிலும் குறிப்பாக உடல் உறுப்பு தானத்தில் மேஜர் மாற்றம் வரும் என்றும் உறுப்பு மாற்றங்கள் எளிதாகும் என்று கணித்திருந்தார். தற்போது வரை அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் நடந்து வரும் ஆய்வுகள் அது உண்மை என்பதையே காட்டுவதாக இருக்கிறது. அதேபோல மருத்துவத் துறையில் ஏற்படும் மாற்றங்களால் வாழ்நாள் அதிகரிக்கும் என்றும் பாபா வங்கா கணித்திருக்கிறார். உலக ஆய்வுகள் அதுவும் உண்மை என்பதையே காட்டுவதாக இருக்கிறது.
நிஜமாகும் கணிப்புகள்
ஐரோப்பாவின் மக்கள் தொகை இந்தாண்டு சரியும் என்று அவர் கணித்திருந்தார். இது ஏற்கனவே உண்மையாகி வருகிறது. இத்தாலி, ஜெர்மனி, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகை சரிந்து வருகிறது. இதனால் ஊழியர்கள் பற்றாக்குறை, பொருளாதாரச் சிக்கல் ஏற்படுவது அதிகரித்திருக்கிறது. இதுவும் பாபா வங்கா கணிப்புகள் உண்மையாகுவதையே காட்டுகிறது.
கடல் நீர்மட்டம் உயர்வது தொடர்பாகவும் பாபா வங்கா எச்சரித்திருந்தார். 2033ம் ஆண்டுக்குள் ஆபத்தான அளவுக்குக் கடல்நீர் மட்டம் உயரும் என அவர் கூறியிருந்தார். சர்வதேச ஆய்வாளர்கள் இந்த விவகாரத்தில் நீண்ட காலமாகவே எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். பனிப்பாறைகள் உருகுவது, புவி வெப்பம் அதிகரிப்பது நிலைமையை மோசமாகியே வருகிறது.
இந்தியாவுக்கான கணிப்பு!
பாபா வங்காவின் பகீர் கணிப்புகளுக்கு நடுவில் பாசிட்டிவாகவும் ஒரு கணிப்பை வெளியிட்டிருக்கிறார். அதாவது சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிற அப்படையிலான இனவெறி ஆகியவை முடிவுக்கு வரும் என்று அவர் கணித்துள்ளார். இந்தியா உட்பட உலகெங்கும் பாகுபாடுகளுக்கு எதிரான குரல்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுவும் மெல்ல நிஜமாகவே போகிறது.
-
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications