வங்கதேச வன்முறைகள் நிஜமாகவே ஷேக் ஹசீனாவுக்கு எதிரானதா? இந்தியாவுக்கு எதிரானதா? உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வங்கதேச நாட்டில் வெடித்த கோபமும் வன்முறைகளும் உண்மையில் அந்நாட்டை விட்டு தப்பி ஓடிய பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரானதுதானா? அல்லது இந்தியா மீதான நீண்டகாலமாக தொடர்ந்த கடுமையான அதிருப்தி, இந்திய வெறுப்பு பிரசாரத்தின் உச்சமாக வெடித்த போராட்டங்களால் ஷேக் ஹசீனா வீழ்த்தப்பட்டு நாட்டை விட்டே தப்பி ஓட நேர்ந்ததா? என்பது அரசியல் அரங்கங்களில் நடைபெறுகிற விவாதம்.

பாகிஸ்தானின் ஒரு அங்கமாக கிழக்கு பாகிஸ்தானாக இருந்தது இன்றைய வங்கதேசம். பாகிஸ்தானிடம் இருந்து இந்தியாவின் 'யுத்த' ஆதரவுடன் வங்கதேசம் என்ற தனிநாட்டை உருவாக்கியவர் முஜிபுர் ரஹ்மான். இன்று தப்பி ஓடி வந்துள்ளாரே ஷேக் ஹசீனாவின் தந்தைதான் முஜிபுர் ரஹ்மான். வங்கதேசத்தின் தந்தையாவும் கொண்டாடப்பட்டவர்தான் ஒரு காலம் வரை.

Bangladesh Sheikh Hasina

'இந்திய முகம்' ஷேக் ஹசீனா: வங்கதேச விடுதலைப் போரை முழுமையாக ஆதரித்ததும் இந்தியாதான். வங்கதேசத்துக்காக பாகிஸ்தானுடம் மிகப் பெரும் பேரழிவு யுத்தம் நடத்தியதும் இந்தியாதான். 1971-ல் வங்கதேச நாடு உருவானது. ஆனால் 1975-ம் ஆண்டிலேயே முஜிபுர் ரஹ்மானை வங்கதேச ராணுவத்தினரேயே படுகொலை செய்தனர். அப்போது வெளிநாட்டில் இருந்த ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்ததும் இந்தியாதான். 6 ஆண்டுகள் இந்தியாவில் இருந்த ஷேக் ஹசீனா பின்னர்தான் வங்கதேச அரசியலுக்குள் கால் பதித்தார். இதனால்தான் எப்போதும் ஷேக் ஹசீனாவை 'இந்தியாவின்' முகமாகவே வங்கதேச மக்கள் பார்க்கின்றனர். ஷேக் ஹசீனாவும் 'இந்தியாவின் அதீத நட்பு' சக்தியாகவே கை குலுக்கியும் வந்தார். ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்தான் கடந்த 16 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது.

கலீதா ஜியா கட்சி: ஷேக் ஹசீனாவுக்கு குடும்ப, அரசியல் எதிரி என்றால் அது கலீதா ஜியா. இவர் வேறு யாருமல்ல முஜிபுர் ரஹ்மானை கொலை செய்த ஜியாவுர் ரஹ்மான் மனைவிதாதான். 1975-ல் முஜிபுர் ரஹ்மான் படுகொலைக்கு பின்னணியாக இருந்தது ஜியாவுர் ரஹ்மான். காலம் எத்தனை விசித்திரமானது.. இதே ஜியாவுர் ரஹ்மானும் 1981-ல் படுகொலை செய்யப்பட்டார்.

ஷேக் ஹசீனா vs கலீதா ஜியா: முஜிபுர் ரஹ்மான், ஜியாவுர் ரஹ்மான் ஆகியோர் இல்லாத வங்கதேசத்தில் இருவரது வாரிசுகளான ஷேக் ஹசீனா (அவாமி லீக்), கலீதா ஜியா (வங்கதேச தேசியவாத கட்சி- பிஎன்பி) மோதத் தொடங்கினர். இயல்பிலேயே இந்தியா ஆதரவாளர் ஷேக் ஹசீனா எனில் கலிதா ஜியா எப்படியான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கக் கூடியவர் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஷேக் ஹசீனா ஆட்சியில் கலீதா ஜியா சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த பின்னணியை இத்துடன் நிறுத்துவோம்.

டெல்லி தலையீட்டில் ஷேக் ஹசீனா: வங்கதேச பொதுத்தேர்தல் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கு முன்னதாக ஷேக் ஹசீனா தம்முடைய செல்வாக்கு சரிந்துவிட்டது; இனியும் வங்கதேச அரசியலில் நிலைத்து நிற்க முடியாது என்ற முடிவுக்கு வந்த காரணத்தால் ' அரசியல் துறவறம்' முடிவில் இருந்தார். வங்கதேச பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிடவும் தீர்மானித்து இருந்தார். ஆனால் 'டெல்லி' தலையீடுகள் அவரை வங்கதேச தேர்தல் களத்தில் இறக்கிவிட்டது. அத்துடன் இல்லாமல் சர்ச்சைக்குரிய வகையில் ஷேக் ஹசீனா வென்றதாகவும் அறிவிக்கப்பட்டு ஆட்சியில் மீண்டும் 'அமர வைக்கப்பட்டார்'. இங்கிருந்துதான் இந்தியாவுக்கு எதிரான வங்கதேச மக்களின் போராட்டம் வெடித்ததா? என்றால் உண்மையில்லை.

கலீதா ஜியாவின் இந்தியா எதிர்ப்பு: உதாரணமாக 2013-ம் ஆண்டு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டாக்கா சென்றார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலீதா ஜியா, பிரணாப் முகர்ஜியை சந்திக்க மறுத்து அவருடனான சந்திப்பை ரத்து செய்தார். பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் வங்கதேசம் சென்ற போது நட்சத்திர ஹோட்டலில்தான் போனால் போகிறது என சந்தித்தவராம் கலீதா ஜியா.

ஷேக் ஹசீனாவின் இந்திய நெருக்கம்: 2019-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனா, இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவுகளை வலுப்படுத்தினார். பல்வேறு ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டன. இத்தகைய இந்தியாவுடனான அதீத நெருக்கம், ஏராளமான ஒப்பந்தங்கள்தான் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இன்றைய வங்கதேசப் புரட்சியின் தொடக்கப் புள்ளி.

இந்தியாவே வெளியேறு இயக்கம்: இந்தியா 18-வது லோக்சபா தேர்தல் களத்தை எதிர்கொண்டிருந்த கடந்த மார்ச் மாதம் வங்கதேசப் புரட்சியின் உச்சமாக "இந்தியாவே வெளியேறு" - "இந்திய தயாரிப்புகளை புறக்கணி" என்கிற முழக்கம் விஸ்வரூபமெடுத்தது. இதன் பின்னணியில் இருந்துதது சாட்சாத் கலீதா ஜியாவின் பிஎன்பி கட்சியேதான்.

வங்கதேசப் புரட்சி: கலீதா ஜியாவின் பிஎன்பி முன்னெடுத்த இந்தியாவே வெளியேறு இயக்கம், இந்தியா எதிர்ப்பு பிரசாரம் மெல்ல மெல்ல ஷேக் ஹசீனாவின் ஆட்சி அதிகாரத்தை அகற்றும் போராட்டமாக உருமாற்றப்பட்டது. இதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டதுதான் வங்கதேச விடுதலைக்குப் போராடியவர்களுக்கான இடஒதுக்கீடு என்கிற விவகாரம். இந்திய வெறுப்பு போராட்டங்கள் பிளஸ் ஷேக் ஹசீனா ஆட்சியின் போராட்டங்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இணைந்து இன்றைக்கு உலகையே அதிரவைத்த வங்கதேசப் புரட்சியாக வெடித்திருக்கிறது. ஷேக் ஹசீனாவை பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு ஓட வைத்திருக்கிறது. ஆகையால்தான் இது உண்மையில் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வன்முறைகளா? 'இந்தியா'வுக்ககு எதிரான வன்முறைகளா? என்கிற விவாதம் அரசியல் அரங்குகளில் விவாதிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+