வெளிநாட்டு மாணவர்களுக்கான சிறந்த 140 நகரங்கள்.. முதல் 100 இடத்தில் ஒரு இந்திய நகரமும் இல்லை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகளவில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி படிப்பதற்கான சிறந்த 140 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் இந்தியாவின் சிறந்த 5 நகரங்களின் பட்டியலில் சென்னை இடம்பெற்றிருக்கிறது.

இந்த பட்டியலில் உலகளவில் லண்டன் 100 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்திருக்கிறது.

ஜெர்மனியின் முனிச் நகரம் மற்றும் தென் கொரியாவின் சியோல் ஆகிய நகரங்கள் ஒரே மதிப்பெண்களை பெற்று 2 வது இடத்தில் உள்ளன.

 சிறந்த உலக நகரங்கள்

சிறந்த உலக நகரங்கள்

4 வது இடத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜுரிச் நகரமும், 5 வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரமும், 6 வது இடத்தில் ஜெர்மனியின் பெர்லினும், 7 வது இடத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவும், 9 வது இடத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிசும், 10 வது இடத்தில் ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியும் உள்ளன.

இந்திய நகரங்கள்

இந்திய நகரங்கள்

140 நகரங்களை கொண்ட இந்த பட்டியலில் முதல் 100 இடங்களில் ஒரு இந்திய நகரங்கள் கூட இடம்பெறவில்லை. மும்பை நகரம் 103 வது இடத்தில் இருக்கிறது. அதை தொடர்ந்து கர்நாடக தலைநகர் பெங்களூரு 114 வது இடத்தில் உள்ளது. சென்னை 125 வது இடத்தில் இருக்கிறது. தலைநகர் டெல்லி 129 வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் வெளிநாடு மாணவர்கள்

இந்தியாவில் வெளிநாடு மாணவர்கள்

கடந்த 2018 - 19 கல்வியாண்டில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கான கணக்கெடுப்பின் படி இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு 47,427 வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமே பதிவு செய்து இருக்கின்றனர். ஆனால், 2023 ஆம் ஆண்டின் முடிவில் 2 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களை சேர்க்க வேண்டும் என்று இலக்கி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

மலிவு விலையில் பொருட்கள், வீடு வாடகை என்று வரும்போது முன்வரிசையில் வந்த பல நகரங்கள் வெளிநாட்டு மாணவர்களுடன் உள்நாட்டு மாணவர்கள் சகஜமாக பழகுவதுடன், அவர்களுக்கு பிடித்தமான சூழலை கணக்கிட்டால் இந்த வரிசையில் பின் தங்கிவிடுகின்றன. இதில் இந்தியா நகரங்களை பல சிறிய நாடுகளின் நகரங்கள் முன்னிலை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+