12 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி ரெடி.. அனுமதி பெற்ற பாரத் பயோடெக்
டெல்லி: இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி வழங்கப்பட்டு வரும் நிலையில் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்தும் வகையில் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு ஊசிகளை தயாரித்து வழங்குகிறது.
தற்போது இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே தற்போது தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பாரத்பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தப்படும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான அனுமதி கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஜெனரலிடம் விண்ணப்பத்தை சமர்ப்பித்த இருந்தது.

மேலும் 12 வயது முதல் 18 வயது இடையே உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வகையில் கோவாக்சின் தடுப்பூசி சோதனையும் அந்த நிறுவனம் மேற்கொண்டது. 525 தன்னார்வலர்களிடம் அந்த நிறுவனம் மூன்றாம் கட்ட சோதனைகளை மேற்கொண்டது. அந்த ஆய்வில் சாதகமான அம்சங்கள் அதிகம் இருப்பதை அந்த நிறுவனம் உறுதி செய்தது.
இது எடுத்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . எதிரான போராட்டத்தில் இந்த முடிவு ஒரு நல்ல மற்றும் முக்கியமான செய்தியாக பார்க்கப்படுகிறது. இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நாரேந்திர மோடி, ஜனவரி முதல் வாரத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டும் எனக் கூறிய நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications