அரசு ஊழியர்களுக்கு உயரும் சம்பளம்.. அதைவிடுங்க.. யாருக்கெல்லாம் "பென்ஷன்" கிடையாது தெரியுமா? அலர்ட்
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அளித்த பிறகு, இப்போது மறுபடியும் விதிகளில் பெரிய மாற்றத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது... இதுகுறித்து ஒரு முக்கிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய பென்சன் திட்டத்தின்கீழ் பல மாற்றங்களைக் கொண்டுவர ஏப்ரம் மாதம் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
ஓய்வூதிய திட்டம்: இதனிடையே, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலுமே அரசு ஊழியர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதில் பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏற்கனவே அமல்படுத்தியுள்ளன.. பழைய பென்சன் திட்டத்தை அரசு ஊழியர்கள் வலியுறுத்துவதற்கான முக்கியக் காரணம் பணியில் இருக்கும் காலத்தில் அவர்களின் சம்பளத்தில் ஓய்வூதியத்திற்காக எவ்வித தொகையும் பிடித்தம் செய்யப்படாது... ஆனால் ஓய்வூதியக் காலத்தில் அவர்கள் சம்பளத்தில் 50% தொகை அவர்களுக்கு உத்தரவாத பென்சனாக கிடைக்கும்.
பென்ஷன்தாரர்கள்: அதுமட்டுமல்லாமல், ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலை நிவாரண உயர்வும் வழங்கப்படும். இதனால் ஓய்வூதியம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய பென்சன் திட்டத்தின்கீழ் இப்போது, அரசு பணியிலிருக்கும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10-14% வரை பிடித்தம் செய்யப்படும். ஆனால் ஓய்வு பெறும் காலத்தில் எந்தவொரு உத்தரவாத ஓய்வூதியத்தொகையும் கிடைக்காது..

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற்றாக உத்தரவாத ஓய்வூதிய திட்டம் (Guaranteed Pension Scheme) அமல்படுத்தப்படும் மத்திய அரசு முக்கிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. அந்தவகையில், புதிய பென்சன் திட்டத்தின்கீழ் 40% உத்தரவாத ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், அரசு ஊழியர்களுக்கு விரைவில் குட்நியூஸ் வர வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
கடும் எச்சரிக்கை: இதனிடையே, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அளித்த பிறகு, மீண்டும் விதிகளில் பெரிய மாற்றத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.. இந்த விதிகளை நீங்கள் கவனிக்கவில்லை என்றால், நீங்கள் பெறும் ஓய்வூதியம் மற்றும் கிராஜூவிட்டியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடும்..
ஆம்... பணியில் ஏதேனும் அலட்சியம் செய்தால், பணி ஓய்வு பெற்ற பிறகு, அவரது ஓய்வூதியம் மற்றும் கிராஜூவிட்டி நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.. யார் யாருக்கெல்லாம் இந்த பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்பது குறித்தான அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.
ஊழியர்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டையும் ஊழியர்கள்தான் வழங்க வேண்டும் என்றும், தலைமை பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறை தொடர்புடைய செயலர்கள் மற்றும் தணிக்கை மற்றும் கணக்கு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்தி வைக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடும் உத்தரவு: மாற்றப்பட்ட இந்த விதிகள் குறித்த தகவல் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ளது.. அதுமட்டுமல்லாமல், குற்றவாளிகள் குறித்த தகவல் கிடைத்தால், அவர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது...
தவறு செய்தால், ஓய்வு பெற்ற பிறகு வழங்கப்படும் பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் முழுமையாக நிறுத்தம் செய்யப்படும் என மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கையானது, அரசு ஊழியர்கள் தரப்பில் கலக்கத்தை தந்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications