பிறப்பு சான்றிதழில் மீண்டும் மத்திய அரசு அதிரடி.. பாஸ்போர்ட் பெறுவதற்கும் பிறப்பு சான்றிதழ் கட்டாயம்
டெல்லி: பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது.. இதுகுறித்து, மத்திய வெளியுறவு அமைச்சம் தெரிவித்துள்ளது என்ன?
பிறப்பு சான்றிதழ் தற்போது தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காகவும், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்ப்பதறகாகவும், மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேர்ப்பதற்காகவும், திருமணத்தை பதிவு செய்வதற்கும், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் போன்றவற்றை பெறுவதற்கும் பிறப்பு சான்றிதழ் தேவைப்படுகிறது.

ஒரே அடையாள அட்டை - பிறப்பு சான்றிதழ்
எனவேதான், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், கல்வி வளாகத்தில் சேருவதற்கு, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், திருமண பதிவு, அரசு பணிகளில் சேருவதற்கு என மொத்த முக்கியமான பணிகளுக்கும், இனி ஒரே அடையாள ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசும் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், பள்ளி சான்றிதழ், நிரந்தர கணக்கு அட்டை, ஓய்வூதிய உத்தரவு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பாஸ்போர்ட் விண்ணப்பத்துக்கு பிறந்த தேதிக்கான ஆவணங்களாக பயன்படுத்தலாம்.
பாஸ்போர்ட் திருத்தங்கள்
ஆனால், பாஸ்போர்ட் பெறுவதற்கான சட்ட விதிகளில் நீண்ட காலமாகவே எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.. கிராமங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானவர்களிடம் பிறப்பு சான்றிதழ் இருக்காது என்பதால், அது பற்றி முடிவு எடுக்கப்படாமலேயே இருந்தது..
இந்நிலையில், பாஸ்போர்ட் சட்டம் 1980 விதிகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. இது தொடர்பாக, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கையில், "கடந்த, 2023ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள், புதிதாக பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.

புதிய திருத்தங்கள்
மாநகராட்சி, நகராட்சி போன்றவை அல்லது அதற்கு நிகரான அமைப்புகள் வழங்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்கப்படும். அரசிதழில் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது" என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த 2023, அக்டோபர் 1க்கு முன்பு பிறந்தவர்களுக்கு இத்தகைய பிறப்பு சான்றிதழ் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications