தர்மருக்கு “ஹேப்பி பர்த் டே”.. ராஜ்யசபா கூடியவுடன் பிறந்தநாள் வாழ்த்து! நெகிழ்ந்த ஓபிஎஸ் ஆதரவு எம்பி
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று மாநிலங்களவையில் ஓபிஎஸ் ஆதரவு அதிமுக எம்பி ஆர்.தர்மருக்கு அவை மரபுப்படி பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவருடன் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி சுகேந்து சேகர் ராய்க்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதானி விவகாரம், லண்டனில் ராகுல் காந்தி ஆற்றிய உரை, ராகுல் காந்தி எம்பி பதவி பறிப்பு போன்ற விவகாரங்களால் இரு அவைகளிலும் தொடர்ந்து அனல் பறந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவை கூடிய உடனே அதானி விவகாரத்தை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கிளப்ப தொடங்கினார்கள்.
எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான எம்பிக்கள் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரினர். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் எம்பிக்களும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் நீடித்தது. அப்போது அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று விவாதிக்கப்படும் விவகாரங்கள் பட்டியலிடப்படும் வரை காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதானி விவகாரம்
அதன் பின்னர் எதிர்க்கட்சி எம்பிக்கள் "மோடி அதானி பாய் பாய்" என்று முழக்கங்களை எழுப்பி நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரினர். அப்போது அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மாநிலங்களவையை ஒத்திவைக்கக்கோரி மல்லிகார்ஜுன கார்கே வழங்கிய நோட்டீசை வாசித்தார்.
அப்போது ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவையின் மையப் பகுதிக்கு சென்று முழக்கங்களை எழுப்பினார். அவருடன் மேலும் சில காங்கிரஸ் எம்பிக்களும் இணைந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர். அத்துடன் சில காங்கிரஸ் எம்பிக்கள் கருப்பு நிற சட்டை அணிந்து அவைக்கு வந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஆர்.தர்மருக்கு பிறந்தநாள் வாழ்த்து
இதனால் அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு எச்சரிக்கை விடுத்தார். அதை தொடர்ந்து அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார். முன்னதாக அதிமுக ஓபிஎஸ் ஆதரவு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.தர்மர் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சுகேந்து சேகர் ராய் ஆகியோருக்கு அவை மரபுப்படி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கடந்த 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்த புளியங்குடி என்ற கிராமத்தில் பிறந்த தர்மர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார்.

ஓபிஎஸ் - இபிஎஸ் விரிசல்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகத்துடன் இவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்வின்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே விரிசல் துளிர்விடத் தொடங்கியது.
ஆர்.தர்மருக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டை பெற்றுத் தருவதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருந்தார். ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் அதிமுக தலைவராக பதவி வகித்த ஆர்.தர்மர் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அணியிலேயே செயல்பட்டு வருகிறார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications