கேரளா, கர்நாடகா, புதுவை உள்பட 24 மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள்.. பாஜக தேசிய தலைமை அதிரடி
டெல்லி: கேரளா, கர்நாடகா, புதுவை உள்பட 24 மாநிலங்களுக்கான புதிய பொறுப்பாளர்களை நியமித்து பாஜக தலைமை அறிவித்துள்ளது. ஆனால், இந்த லிஸ்டில் தமிழகம் இடம் பெறவில்லை. கேரள மாநில மேலிட பொறுப்பாளராக பிரகாஷ் ஜவடேகர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை. 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற டார்கெட்டுடன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பாஜகவிற்கு 244 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதனால், தற்போது ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடு ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது. உத்தர பிரதேசம் உள்பட வடமாநிலங்களில் பாஜகவிற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது.

கேரளாவில் முதல் முறையாக ஒரு தொகுதியை வென்றது. கர்நாடகாவிலும் பாஜக 17 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் கடந்த முறையை ஒப்பிடும் போது 8 எம்பிக்கள் குறைவாக கிடைத்துள்ளது. மத்தியில் ஆட்சியை பிடித்த போதும் பாஜகவிற்கு சில மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால், தேர்தல் முடிந்த பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கட்சி தலைமை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.
Bharatiya Janata Party appoints State in-charge and Co-in charge for various States pic.twitter.com/p9gRmBmoJy
— ANI (@ANI) July 5, 2024
தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் முடிந்துள்ள நிலையில், 24 மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்களை பாஜக தலைமை நியமனம் செய்துள்ளது. பீகார் மாநில பாஜக பொறுப்பாளராக வினோத் தாவ்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளராக தீபக் பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இமாச்சல பிரதேச பொறுப்பாளராக ஸ்ரீகாந்த் சர்மாவும், ஜார்க்கண்ட் மாநில பொறுப்பாளராக லக்ஷ்மி காந்த் பஜ்பாலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநில பாஜக பொறுப்பாளராக ராதா மோகன் தாஸ் அகர்வாலும் இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநில பாஜக பொறுப்பாளராக பிரகாஷ் ஜவடேகரும் இணைபொருப்பாளராக அபரஜிதா சாரங்கியும் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் மகேந்திர சிங் (பொறுப்பாளர்), இணை பொறுப்பாளராக சதீஷ் உபாத்யாய் நியமிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் பொறுப்பாளராக அஜீத் கோப்செத் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
ஒடிசா பொறுப்பாளராக விஜயபால் சிங்க தோமரும், இணை பொறுப்பாளராக சுஷ்ரி லதா உசேண்டியும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். புதுவை பொறுப்பாளராக நிர்மல் குமார் சுர்னா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
தமிழகத்திற்கு பொறுப்பாளர் புதிதாக நியமனம் செய்யப்படவில்லை. தமிழகத்திற்கு தேர்தல் மேலிட பொறுப்பாளராக அரவிந்த் மேனனும், இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டியும் நியமித்து கடந்த ஜனவரி மாதம் பாஜக தேசிய தலைமை அறிவித்தது. தற்போது 21 மாநிலங்களுக்க்கு தேர்தல் பொறுப்பாளர்கள் லிஸ்ட் வந்துள்ள நிலையில், தமிழகத்திற்கு அறிவிக்கப்படவில்லை.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்!












Click it and Unblock the Notifications