மத்திய அரசுக்கு எதிராக வரிந்து கட்டும் முன்னாள் ஆளுநர்..‘நறுக்’ என பதிலடி கொடுத்த அமித்ஷா..என்னாச்சு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், புல்வாமா தாக்குதல் சம்பவம் உள்பட பல்வேறு விவகாரங்களில் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். இவரது பொறுப்பு காலத்தில் தான் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதோடு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய புல்வாமா தாக்குதலும் நடைபெற்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்த ராணுவ வீரர்களின் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.
நாட்டையே உலுக்கிய புல்வாமா தாக்குதல் மற்றும் பாஜக அரசு மேற்கொண்ட மிக முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றான சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகிய இரண்டு நிகழ்வுகளின் போது ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், 2019 ஆம் ஆண்டு இறுதியில் கோவா ஆளுநராக மாற்றப்பட்டார். அதன்பிறகு மேகாலயா மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆளுநர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில், புல்வாமா சம்பவம் நடைபெற்று 4 ஆண்டுகள் ஆகிவிட்ட அண்மையில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சத்யபால் மாலிக், "சிஆர்பிஎப் வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே நடந்தது. வீரர்களை அழைத்து செல்ல விமானம் கேட்கப்பட்டது. ஆனால் விமானம் வழங்கப்படவில்லை.
விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இந்த சம்பவம் நடைபெற்றிருக்காது. இது குறித்து பிரதமர் மோடியிடம் கூறினேன். ஆனால் பிரதமர் இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம், அமைதியாக இருங்கள்" என்று கூறினார். சத்யபால் மாலிக்கின் இந்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆங்கில தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமித்ஷா இது குறித்து பேசியிருக்கிறார்.
அமித்ஷா கூறுகையில், எதையும் மறைக்கும் வகையில் பாஜக செய்யவில்லை. சத்யபால் மாலிக் கூறியது பொது மன்றங்களில் விவாதிக்கக் கூடியது இல்லை. முறைகேடுகள் இருப்பது பற்றி அவருக்கு தகவல் இருந்தால் அவரது பதவி காலத்திலேயே அதை சத்யபால் தெரிவித்து இருக்க வேண்டும். தற்போது ஏன் இதுபோன்ற அவர் பேச வேண்டும்? இது நம்பகத்தன்மையை உறுதிபடுத்த வேண்டியதை காட்டுகிறது" என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications