பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது! எந்த மதத்தையும் அவமதிக்க கூடாது! பாஜக திடீர் அறிக்கை! என்னாச்சு
டெல்லி: பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது, எந்த மதத்தை சேர்ந்த தலைவர்களையும் விமர்சிப்பதை பாஜக ஏற்றுக்கொள்ளாது என்று பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் இஸ்லாமிய இறை தூதுவர் நபி குறித்து தவறான சில கருத்துக்களை பதிவு செய்தார். ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து பேசுகையில் நபியை அவமதிக்கும் வகையில் மோசமான கருத்துக்களை நுபுர் சர்மா பேசினார்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், நான் அப்படிப்பட்ட கருத்துக்களை பேசவே இல்லை என்று அவர் மறுத்தார்.
Recommended Video

நபி அவமானம்
ஆனால் அவர் நபியை அவமதித்து பேசியதற்கான ஆதாரங்கள் வீடியோக்களாக வெளியாகின. இது நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர்கள் சார்பாக போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இந்துக்கள் இஸ்லாமியர்கள் இடையே மோதல் பெரிதான நிலையில் 36 பேர் இதில் கைது செய்யப்பட்டனர். 1500 பேர் மீது இதில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

பாஜக மத ஒற்றுமை
இந்த நிலையில் பாஜக சார்பாக தற்போது மத ஒற்றுமை தொடர்பான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் இந்தியாவின் பல்லாயிர வருட வரலாற்றில், இந்தியாவில் பல்வேறு மதங்கள் வளர்ந்து இருக்கின்றன, தோன்றி இருக்கின்றன. பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது. எந்த மதத்தை சேர்ந்த தலைவர்களையும் விமர்சிப்பதை பாஜக ஏற்றுக்கொள்ளாது.

பாஜக மதிக்கிறது
அதேபோல் எந்த பிரிவையும், மதத்தையும் இகழ கூடிய கொள்கைகளையும் பாஜக கடுமையாக எதிர்க்கிறது. அது போன்ற கருத்துக்கள், கொள்கைகளை, நபர்களை பாஜக என்றும் ஆதரிக்காது. இந்திய அரசியலமைப்பு சட்டம் எப்போது, எல்லோருக்கும், தங்களுக்கு பிடித்த மதத்தை பின்பற்றவும், பிடித்த மதத்தை பின்பற்றி வாழவும், மற்ற மதங்களை மதிக்கவும் வழி செய்து கொடுத்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் அதற்கான உரிமையை கொடுத்துள்ளது.

உரிமை உள்ளது
75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் இந்திய நாட்டில், எல்லோருக்கும் சமமான, சம மரியாதை கொண்ட ஒரு சிறந்த இந்திய நாட்டை நாம் உருவாக்க வேண்டும். இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருங்கிணைத்த வளர்ச்சிக்கும் ஏற்றபடி நாம் உழைக்க வேண்டும். எல்லோரும் வளங்களையும், வளர்ச்சிகளையும் சமமாக பெற்றிட நாம் செயலாற்ற வேண்டும் என்று பாஜக சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications