உதயநிதியை வைத்து பாஜக போடும் மிகப்பெரிய பிளான்.. நடுவில் பொன்முடி வேறு.. சிக்கலில் காங்கிரஸ்
டெல்லி: அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியதை பெரிய அளவில் விவாதத்தை உருவாக்கி, காங்கிரஸ் கட்சியை நிலைகுலைய வைக்க பாஜக விரும்புகிறதாம். அதற்காக சனாதனம், இந்து மதம் குறித்து திமுக அமைச்சர்கள் பேசிய கணொலிகள் இந்தியில் டப் செய்யப்பட்டு பரப்பும் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது பாஜக தலைமை.
சனாதானம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் பேசும் போது, "மலேரியா, டெங்கு, கொரோனா போன்றவற்றை நாம் எதிர்க்கக்கூடாது, அவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டும். அப்படிதான் இந்த சனாதனமும்.. சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்' என்று கூறினார்.

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நாடு முழுவதும் பாஜகவினர் உதயநிதியின் பேச்சுக்கு எதிராக போராட்டமும் நடத்தினர். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி, அவர்களுக்கு இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்று விருப்பம் என்றும் பாஜகவினர் குற்றம்சாட்டி பல்வேறு வீடியோக்களை வெளியிட்டனர்.
இந்து மதத்தை அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டி, பல்வேறு வீடியோக்கள் திமுக குறித்து வடமாநிலங்களில் வேகமாக பரவிய நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் பேசியது குறித்து விளக்கமும் அளித்தார். தான் இந்து மதம்குறித்து பேசவில்லை என்றும், சனாதனத்தின் பெயரால் நடைபெறும் தீண்டாமை கொடுமைகளை ஒழிக்க வேண்டும் என்றே பேசியதாக கூறினார்.
எனினும் பாஜகவினர் தொடர்ந்து சனாதனம் விவகாரத்தை கையில் எடுத்து, இந்தியா கூட்டணிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுமே சனாதனம் குறித்த திமுகவின் கருத்துக்களை எதிர்த்தது. எனினும் அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லவில்லை. மம்தா பானர்ஜி மட்டுமே உதயநிதியின் பேச்சினை நாசுக்காக எதிர்த்தார்.
ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராகுல் காந்தியோ, சோனியா காந்தியோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இதனால் பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸை இழுத்துவிட்டு பதில் தெரிவிக்க வைக்க விரும்புகிறதாம்.
அதன் எதிரொலியாகவே பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, இன்று ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு கேள்வி எழுப்பி எக்ஸ் தளத்தில் பதிவினை வெளியிட்டார். தன் பதிவில் ராகுல், சோனியா மற்றும் காங்கிரசுக்கு சனாதனத்தின் மீது வெறுப்பு உள்ளது. சனாதனத்தின் மீது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு வெறுப்பு இருப்பதாக ஜேபி நட்டா கூறியுள்ளார்.
இது ஒருபுறம் எனில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் பேசுகையில், உயிரை தியாகம் செய்து நமது முன்னோர்கள் கட்டி காத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் அழிக்க விரும்புகிறார்கள். அவர்களை சகித்து கொள்ள முடியாது. சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் சொல்லி கொள்ள விரும்புவது ஒன்று தான்.. நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம். எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது என்று எச்சரித்தார்.
-
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
நாடு முழுக்க கேஸ்.. அந்த ஒரு பேச்சுக்காக விடாது துரத்தும் கேஸ்.. உதயநிதி பிரமாண பத்திர சீக்ரெட்!












Click it and Unblock the Notifications