பாஜக+ஜேடியு+டிடிபி சேர்ந்தாலும் மெஜாரிட்டி வராது.. 272 மேஜிக் நம்பரை எட்ட இரண்டு பேர் ஆதரவு தேவை
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு கொடுத்தால் மட்டும் ஆட்சியமைத்துவிட முடியாது. சிவசேனாவின் ஷிண்டே கட்சியோ அல்லது லோக் ஜனசக்தி கட்சியோ ஆதரவு கொடுக்க வேண்டும் குறைந்தது 4 கட்சிகள் ஆதரவு தந்தால் ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, பாஜக 240 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வென்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி 37 இடங்களில் வென்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 இடங்களிலும் திமுக 22 இடங்களிலும், தெலுங்கு தேசம் 16 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களிலும், சிவசனோ (உத்தவ் தாக்கரே அணி), 9 இடங்களிலும், என்சிபி (சரத்பவார் அணி) 8 இடங்களிலும், சிவசேனா (ஷிண்டே அணி ) 7 இடங்களிலும், லோக் ஜனசக்தி 5 இடங்களிலும் வென்றுள்ளது..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4 இடங்களிலும், யுஎஸ்ஆர்சிபி 4 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 3 இடங்களிலும், ஆம் ஆத்மி 3 இடங்களிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 3 இடங்களிலும், ஜனசேனா 2 இடங்களிலும், சிபிஐ எம்எல் கட்சி இரண்டு இடங்களிலும், மதசார்பாற்ற ஜனதா தளம் 2 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 2 இடங்களிலும், சிபிஐ கட்சி 2 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக்தள் 2 இடங்களிலும், ஜம்மு காஷ்மீர் நேஷனல் காங்கிரஸ் 2 இடங்களிலும் வென்றுள்ளன.
இது தவிர யுபிபிஎல், அசாம் கன பரிஷித், இந்துஸ்தானி ஆவாம் மோர்சா, கேரளா காங்கிரஸ், ஆர்எஸ்பி, என்சிபி, விஓடிபிபி கட்சி, ஜிபிஎம் சிரோன்மணி அகாலி தளம். ஆர்எல்டிபி, பாரத ஆதிவாசி கட்சி, சிக்கிம் கிராந்திகரி மோர்சா, மதிமுக, அசாத் சமாஜ்வாதி, ஏஐஎம்ஐஎம், போன்ற கட்சிகள் தலா ஒரு இடங்களில் வென்றுள்ளன. இதுதவிர சுயேட்சைகள் 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை இல்லை.. அதேநேரம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முழு மெஜாரிட்டி உள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் எளிதாக ஆட்சியமைக்க முடியும். ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் (16) மற்றும் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு கொடுத்தால் மட்டும் ஆட்சியமைக்க முடியும்.
அதுமட்டுமல்ல, இவர்களின் இருவரின் ஆதரவை தாண்டி சிவசேனாவின் ஷிண்டே கட்சியோ(7) அல்லது லோக் ஜனசக்தி கட்சியோ (5) ஆதரவு கொடுக்க வேண்டும். அதாவது குறைந்தது 4 கட்சிகள் ஆதரவு பாஜகவிற்கு தேவைப்படும். அப்போதுதான் 272 இடங்களை கடந்து சுமூகமாக ஆட்சியமைக்க முடியும். தற்போதைய நிலையில் இந்தியா கூட்டணி ஏதாவது பெரிய ஆஃபர் கொடுத்து நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை இழுக்க முயற்சிக்கக்கூடும் என்பதால் பரபரப்பு எழுந்துள்ளது.
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்!












Click it and Unblock the Notifications