பாஜக தேர்தல் அறிக்கை ரெடி.. நாளை வெளியிடும் பிரதமர் மோடி.. என்னென்ன அம்சங்கள்? பெரும் எதிர்பார்ப்பு
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலுக்கான பாஜகவினர் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் பாஜக நாளை தனது செயல்திட்டங்களை அறிவிக்க உள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ல் முதற்கட்ட தேர்தலும், ஜுன் 1ல் கடைசி கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் பாஜக உள்ளது. கடந்த 2014, 2019 ஆகிய தேர்தல்களை தொடர்ந்து இந்த முறை வென்று மத்தியில் ஹாட்ரிக் முறையில் ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
மேலும் வரும் தேர்தலில் பாஜக 370 இடங்களிலும், பாஜக கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்று இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பாஜகவினர் தேர்தல் அறிக்கை தொடர்பான முக்கிய விபரங்கள் வெளியாகி உள்ளது. அதாவது வரும் லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்க 27 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த குழுவின் தலைவராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை ஒருங்கிணைப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டனர். மற்ற 24 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த குழுவினர் 2 முறை ஆலோசனை நடத்தி பாஜகவின் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர். அதாவது வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும்போது மக்களுக்கு செயல்படுத்தப்பட உள்ள செயல் திட்டங்களை உள்ளடக்கி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. Modi guarantee: Developed India 2047 என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கை நாளை காலையில் வெளியிடப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்பட மூத்த தலைவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளனர். நாளை காலை 8.30 மணிக்கு டெல்லி பாஜகவின் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.
இதில் தேர்தல் வாக்குறுதிகளாக பல்வேறு முக்கிய அம்சங்களை பாஜக அறிவிக்க உள்ளது. அதாவது இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகளுக்கு தனித்தனியாக நலத்திட்டங்களை அறிவிக்கப்பட உள்ளது.
முன்னதாக கடந்த 5ம் தேதி காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியை அளித்தது. அதில் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். மத்திய அரசு பணியில் 2025ம் ஆண்டு முதல் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, ஆண்-பெண்களுக்கு சமஊதியம்,முதியவர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்குவது, சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வது, நீட் விலக்கு, ஜிஎஸ்டி வரி விதிப்பு சட்டத்தில் மாற்றம் செய்தல் உள்பட பல வாக்குறுதிகளை அறிவித்து இருந்தது இதனால் பாஜகவின் தேர்தல் அறிக்கை மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா?












Click it and Unblock the Notifications