சான்ஸே இல்ல! 2 தலைகளுக்கும் "நோ" சொல்லும் பாஜக.. அடடா புது பிளானை கையிலெடுத்த டெல்லி! அப்போ திமுக?
டெல்லி: இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார் , எந்தெந்த கட்சிகள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும் என்ற விவாதங்கள், கேள்விகள் அரசியல் உலகில் எழுந்துள்ளன.
குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடியும் நிலையில், இந்த வருடம் ஜூலை மாதம் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 51 சதவிகித வாக்குகள், அல்லது அதற்கு கூடுதலாக வாக்குகள் பெறும் நபர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
இந்த முறை பாஜக கூட்டணிக்கு எம்பி, எம்எல்ஏ எல்லாம் சேர்த்து 5.42 லட்சம் வாக்குகள் உள்ளன. எதிர்க்கட்சிகளின் திமுக, காங்கிரஸ் எல்லாம் சேர்த்து 4.49 லட்சம் வாக்குகள் கொண்டு உள்ளன.

குடியரசுத் தலைவர்
இந்த நிலையில் பாஜக யாரை குடியரசு வேட்பாளராக முன்னிறுத்தும், எந்தெந்த கட்சிகள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும் என்ற விவாதங்கள், கேள்விகள் அரசியல் உலகில் எழுந்துள்ளன. பல்வேறு பெயர்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான பட்டியலில் அடிபட்டு வருகின்றன. ஆனால் இப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற மாட்டார்கள் என்று பாஜக மற்றும், ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாது என்று அவ்வட்டாரங்கள் கூறுகின்றன.

சர்ப்ரைஸ் முடிவு
பொதுவாக இது போன்ற வேட்பாளர் அறிவிப்பில் பாஜக தலைமையும், பிரதமர் மோடியும் சர்ப்ரைஸ் முடிவுகளை எடுப்பார்கள். கடந்த முறை ராம்நாத் கோவிந்தை பாஜக வேட்பாளராக அறிவித்ததும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் மூவாக பார்க்கப்பட்டது. ராம்நாத் கோவிந்த் கடைசி வரை லிஸ்டில் இல்லாமல் திடீரென அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த முறையும் சர்ப்ரைஸ் வேட்பாளர் ஒருவரை பாஜக தரப்பு அறிவிக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவை பெற எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன.

நிதிஷ் குமார்
மமதா பானர்ஜி, கே சந்திரசேகர ராவ் ஆகியோர் நிதிஷ் குமாரின் ஆதரவோடு எதிர்க்கட்சிகள் சார்பாக ஒரு குடியரசுத் தலைவர் வேட்பாளரை களமிறக்க முயன்று வருகின்றனர். இந்த நிலையில்தான் நிதிஷ் குமார் உள்ளிட்ட பல கூட்டணி தலைவர்கள் ஏற்கும் வகையில் ஒரு வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளும் பாஜக இருக்கிறது. அதாவது தங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பாஜக ஒரு வேட்பாளரை தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் நிதிஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி தலைவர்கள் ஆதரவு தந்தால் மட்டுமே பாஜக வேட்பளார் வெற்றிபெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியரா?
இதனால் மீண்டும் ராம்நாத் கோவிந்த் மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாது. புது முகம் ஒருவர் களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவர் இஸ்லாமியராக இருந்தாலும் ஆச்சர்யப்படுத்துவதற்கு இல்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஒரு முன்னாள் அரசியல் தலைவர், 2 தொழிலலதிபர்கள், ஒரு ஆளுநர் ஆகியோரின் பெயர்கள் இந்த பட்டியலில் அடிபடுகின்றன. ஆனால் இவர்களில் யாரை பாஜக உறுதி செய்யும் என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இன்னொரு பக்கம் தமிழ்நாடு அரசியலிலும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு விவாதங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

திமுக நிலை?
ஏனென்றால் சமீபத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறக்க சென்னை வந்தார். திமுகவுடன் இவர் நெருக்கம் காட்டுவதால், திமுக ஆதரவோடு, பாஜக சார்பாக வெங்கையா நாயுடு குடியரசுத் தலைவர் ஆகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வெங்கையா நாயுடுவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படாது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் திமுக குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தரப்பை ஆதரிக்க வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுகிறது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications