வங்க தேசத்தில் தாக்கப்படும் இந்துக்கள்.. புதிய தலைவரை வாழ்த்திய ராகுல்! அனுராக் தாக்கூர் அட்டாக்!
டெல்லி: நாடாளுமன்றத்தில் காசா குறித்து பேசிய எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி, அண்டை நாடான வங்கதேசத்தில் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அந்நாட்டின் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என பாஜக எம்பி அனுராக் தாக்கூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இட ஒதுக்கீடு தொடர்பாக அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்தது. தொடர்ந்து போராட்டக்காரர்கள் பிரதமர் அரண்மனையை நோக்கி வந்த நிலையில் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து ராணுவ விமான மூலம் டாக்காவில் இருந்து டெல்லி வந்த அவர் தற்போது ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு இந்தியாவின் சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சில நாட்களில் அவர் லண்டன் அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாட்டின் நிர்வாக பொறுப்பை தான் ஏற்றதாக ராணுவ தளபதி அறிவித்தார். தொடர்ந்து இடைக்கால அரசு அமைப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள், மாணவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டருடன் ஆலோசனை நடத்திய நிலையில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியரான முகம்மது யூனுஸ் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கோரிக்கையை தொடர்ந்து பாரிஸீல் இருந்த முகமது யுனிஸ் டாக்கா திரும்பினார். தொடர்ந்து அவரது தலைமையிலான இடைக்கால அரசு பதவி ஏற்றது.
இது தொடர்பாக வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி,”வங்கதேசத்தின் புதிய பொறுப்பை ஏற்று இருக்கும் முகமது யூனிஸ்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு இந்துக்கள் மற்றும் பிற அனைத்து சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என தாங்கள் விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல,” வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக பதவியேற்ற பேராசிரியர் முகமது யூனிஸுக்கு வாழ்த்துக்கள் அமைதி மற்றும் இயல்பு நிலையை விரைவாக மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்” என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்து அவர் ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் காசா குறித்து பேசிய எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி, அண்டை நாடான வங்கதேசத்தில் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அந்நாட்டின் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என பாஜக எம்பி அனுராக் தாக்கூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை கடும் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அனுராக் தாக்கூர்,” நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காசா குறித்து பேசினார். ஆனால் அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நமது அண்டை நாட்டில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நமது அண்டை நாடான வங்கதேசத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து நாம் அனைவரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அங்குள்ள இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை மதத்தினரின் பாதுகாப்பு குறித்து அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தங்களது கவலையை தெரிவித்திருக்கின்றன. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அந்நாட்டின் புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது துரதிஷ்டவசமானது. வங்கதேசத்தில் இடைக்கால அரசு இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்து பேசவில்லை. ஆனால் காசா குறித்து பேசும் எதிர்க்கட்சித் தலைவர் இந்துக்கள் மீதான தாக்குதல் மற்றும் வங்கதேசத்தை பற்றி பேசாமல் இருப்பது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications