பாஜக எம்பி கவுதம் காம்பீருக்கு கொலை மிரட்டல்.. பாதுகாப்பு கேட்டு போலீஸில் புகார்
டெல்லி: பாஜக எம்பி கவுதம் காம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர்தான் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார்.

அவர் அத்தொகுதியில் வெற்றியும் பெற்றுவிட்டார். வாக்குச் சேகரிக்கும் போதிலிருந்தே சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் டெல்லி முழுவதும் காற்று மாசால் அவதி அடைந்தது.
அப்போது நாடாளுமன்றத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் காம்பீர் பங்கேற்காமல் வங்கதேசத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிக்கு வர்ணனையாளராக சென்றுவிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காம்பீரை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மேலும் அவர் ஜிலேபி சாப்பிட்டு கொண்டிருந்த புகைப்படங்களும் வெளியாகின. இதனால் கடுப்பான காம்பீர், நான் ஜிலேபி சாப்பிடாமல் இருந்தால் காற்று மாசு சரியாகிவிடுமா என எதிர்கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக காம்பீர் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஷாதாரா மாவட்ட துணை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறுகையில் சர்வதேச எண்ணிலிருந்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க காம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வழக்குப் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications