ஒரே நாளில் 2 புயல்.. பாஜக ஆர்ப்பாட்டம் Vs ஒன்றுகூடும் காங்.கூட்டணி.. மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்
டெல்லி: மஹுவா மொய்த்ரா, பாஜக ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு நடுவில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம். இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்பியானவர் மஹுவா மொய்த்ரா. இவர், லோக்சபாவில் அதானி விவகாரம் குறித்து எழுப்பவும், தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடமிருந்து பணம், பல்வேறு பரிசு பொருட்களை லஞ்சமாக பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணைக்கு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிடவும், நிஷிகாந்த் துபே எம்பி மற்றும் புகாருக்கு உள்ளான மஹுவா மொய்த்ரா வை நேரில் அழைத்து விசாரணை நடத்தியது. மேலும், 479 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதில், மஹுவா மொய்த்ரா, ஹிரா நந்தானியிடம் பணம், பரிசு பொருட்களை பெற்று கொண்டு அவரை கேள்வி எழுப்ப அனுமதித்ததாகவும், இதற்காக மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்பதற்கான இணையதள விபரம், பாஸ்வேர்ட் உள்ளிட்டவற்றை அவரிடம் பகிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, மஹுவா மொய்த்ரா எம்பியை பதவி நீக்கம் செய்யலாம் என பரிந்துரைக்கப்படவும், இதை சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆத்திரமடைந்து, மஹுவா மொய்த்ரா மீது விசாரணை தேவை என்று கூறி வெளிநடப்பு அத்துடன், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, இன்று அவை மீண்டும் கூடுகிறது.. நாடாளுமன்ற கூட்ட தொடருக்கு முன்னதாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் காலை 10 மணிக்கு எதிர்க்கட்சிகள் அறையில் ஒன்றுகூடி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மற்றொருபுறம், பாஜக எம்பிக்கள் அவைக்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்றும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிகிறது.. காங்கிரஸ் எம்பிக்கள் ஊழல் செய்வதை கண்டித்து பாஜக உறுப்பினர்கள் காந்தி சிலை முன்பு இந்த போராட்டத்தை நடத்தப்போவதாக கூறப்படுகிறது..
சமீபத்தில், ஒடிசா தனியார் மதுபான நிறுவனத்தில், வருமானத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 400 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.. இந்த நிறுவனம் காங்கிரஸ் எம்பிக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில்தான், பாஜகவின் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஒரே நாளில், காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே அதிரடி முடிவுகளில் உள்ளதால், டெல்லியே பரபரப்பாக காணப்படுகிறது.
-
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications