3 மாநில முதல்வர்கள் யார்? "மிஷன் 2024..." நாளை பாஜக எடுக்கும் முக்கிய நடவடிக்கை! இதுதான் விஷயமே
டெல்லி: பாஜக வென்ற மூன்று மாநிலங்களில் முதல்வர் தேர்வு செய்யப்படுவதில் குழப்பம் நிலவும் நிலையில், நாளை இதில் பாஜக முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் 3 மாநிலங்களில்- மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தி ஹார்ட் லேண்ட் முழுக்க பாஜக ஆட்சியைப் பிடித்து உள்ளது.

இருப்பினும், இந்த 3 மாநிலங்களில் முதல்வர்கள் யார் என்பதை பாஜக தலைமையால் இன்னும் தேர்வு செய்ய முடியவில்லை.. இது தொடர்பாகக் கடந்த சில நாட்களாகவே ஆலோசனை நடந்து வரும் போதிலும் முதல்வர்களை இன்னும் பாஜக இறுதி செய்யவில்லை.
முதல்வர்கள் யார்: இந்தச் சூழலில் தான் இந்த மூன்று மாநிலங்களுக்கு பாஜக நாளை பார்வையாளர்களை நியமிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து முதல்வர்கள் யார் என்பது இறுதி செய்யப்படும். ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் முதல்வர் ரேஸில் பலர் இருப்பதே இந்தத் தாமதத்திற்குக் காரணமாகும்.
வழக்கமாகச் சட்டசபைத் தேர்தல்களில் பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவித்தே போட்டியிடும். ஆனால், முதல்வர் ரேஸில் பலர் இருந்ததாலேயே பாஜக முதல்வர் வேட்பாளர் என யாரையும் அறிவிக்காமல் தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
நாளை பார்வையாளர்கள் நியமனம்: நாளைய தினம் பாஜக மூன்று மாநிலங்களில் பார்வையாளர்களை நியமிக்கும் நிலையில், அவர்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் கூட்டங்களை மேற்பார்வையிடுவார்கள், இந்தக் கூட்டங்களில் புதிய முதல்வர் யார் என்பது தேர்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. 2024 லோக்சபா தேர்தலையும் கருத்தில்கொண்டே பாஜக ஆலோசனை செய்து வருவதே இந்தத் தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
கடும் போட்டி: மத்தியப் பிரதேசத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் முக்கிய காரணம். அங்கே அவர் முதல்வர் ரேஸில் முன்னணியில் இருக்கும் நிலையில், மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் படேல், ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் அங்கே முதல்வர் ரேஸில் உள்ளனர்.
சத்தீஸ்கரில், முன்னாள் முதல்வர் ராமன் சிங், மாநில பாஜக தலைவர் அருண்குமார் சாவ், எதிர்க்கட்சித் தலைவர் தரம்லால் கவுசிக் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஓபி சவுத்ரி ஆகியோர் முதல்வர் ரேஸில் இருக்கிறார்கள். இதில் ராமன் சிங் தவிர மற்ற மூன்று தலைவர்களும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே முதல்வர் ரேஸில் இருக்கிறார். அவரை 25 பாஜக எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை சந்தித்தனர். இது அவருக்கான ஆதரவை காட்டுகிறது. மேலும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜூன் ராம் மேக்வால், ராஜஸ்தான் பாஜக தலைவர் சி.பி.ஜோஷி, தியா குமாரி, மஹந்த் பாலக்நாத் ஆகியோருக்கு வாய்ப்பு உள்ளது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications