டெல்லியில் ஆபரேசன் தாமரை.. ஆடிபோன அர்விந்த் கெஜ்ரிவால்! மகாராஷ்டிரா மாடலா? ஷிண்டே இடத்தில் சிசோடியா
டெல்லி: அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் டெல்லி அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்து சிவசேனாவிலிருந்து ஏக்நாத் ஷிண்டேவை பிரித்து ஆட்சியை கைப்பற்றியதை போல் டெல்லியில் மணிஷ் சிசோடியாவை வைத்து பாஜக ஆபரேசன் தாமரையை செயல்படுத்த திட்டமிட்டிருப்பது நடந்து வரும் அரசியல் நிகழ்வுகளில் தெரிகிறது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தபோது மகாராஷ்டிராவில் அமைச்சராக இருந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவாப் மாலிக். பாஜக அரசை இவர் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளிடம் குறைந்த விலையில் நிலம் வாங்கியதாகவும், பல கோடி மோசடி செய்ததாகவும் குற்றம்சாட்டி இவரை பிப்ரவரி மாதம் கைது செய்தது அமலாக்கத்துறை. இதேபோல் மற்றொரு மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக் மோசடி வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

டெல்லி அமைச்சர்கள்
இதேபோல் ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை மோசடி வழக்கில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். வகுக்கப்பட்டு உள்ள மதுபான கொள்கையில் தனியார் உற்பத்தியாளர்கள் லாபமடைந்து இருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார்.

ஆம் ஆத்மியின் முன்னேற்றம்
இது ஒருபுறம் இருக்க குஜராத் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாஜகவுக்கு ஆம் ஆத்மி நெருக்கடி கொடுத்து வந்தது. இந்த நிலையில், மதுக்கடை உரிம ஊழல் தொடர்பாக 2 நாட்களுக்கு முன்பாக டெல்லி துணை நிலை ஆளுநர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட்ட 21 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது. அப்போது அவரது கணினி செல்போன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிசோடியாதான் ஷிண்டேவா?
இந்த நிலையில் நேற்று மணிஷ் சிசோடியா நேற்று ட்விட்டரில் பதிவிட்டதாவது, "பாஜக எனக்கு மெசேஜ் அனுப்பியது. அதில், ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைய அழைப்பு விடுத்தது. அதுபோல் செய்தால் சிபிஐ, அமலாக்கத்துறை பதிவு செய்து இருக்கும் வழக்குகள் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளது. நான் தலையை துண்டித்தாலும் சதிகாரர்கள் முன் தலைகுனிய மாட்டேன். வழக்குகள் அனைத்தும் போலியானவை." என்றார்.

எம்.எல்.ஏக்கள் கூட்டம்
இந்த நிலையில், டெல்லியில் ஆபரேசன் தாமரை தொடங்கி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை வளைத்து பாஜக ஆட்சியை பிடிக்க முயல்வதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 40 எம்.எல்.ஏக்களை பாஜக வளைக்க முயன்றதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து அவசர எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை ஆம் ஆத்மி இன்று கூட்டியது. இதனை தொடர்ந்து 11 மணிக்கு கூடிய கூட்டத்தில் 62-ல் 53 எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட 12 எம்.எல்.ஏக்கள் தங்களிடம் பாஜக தொடர்புகொண்டதாக தெரிவித்துள்ளனர்.

ஆபரேசன் தாமரை
டெல்லி ஆம் ஆத்மியில் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக அதிக செல்வாக்குமிக்க தலைவராக இருப்பவர் மணிஷ் சிசோடியா. மகாராஷ்டிராவைபோல் முன்கூட்டியே அமைச்சர்களை மீது அமலாக்கத்துறை மூலம் கைது செய்ய வைத்து ஏக்நாத் ஷிண்டேவை வளைத்ததைபோல், சிசோடியாவை தங்கள் தங்கள் பக்கம் வளைக்க பாஜக முயன்றிருப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications