டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லத்திசார்ஜ் நடத்திய மம்தா பானர்ஜிக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்க தயாராகும் பாஜக!

Google Oneindia Tamil News

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஜெய்ஸ்ரீராம் என எழுதப்பட்ட 10 லட்சம் தபால் அட்டைகளை அனுப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.

கொல்கக்தாவில் இருந்து நைஹாத்தி என்ற பகுதிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பதபாரா என்ற இடத்தில் சாலையோரம் நின்றிருந்த சிலர் மம்தாவை பார்த்து ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டனர்.

அப்போது ஆத்திரமடைந்த மம்தா பானர்ஜி காரில் இருந்து கீழே இறங்கி அந்த நபருடன் வாக்கு வாதம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டவர்கள் வங்காளத்தை சேர்ந்தவர்கள் இல்லை.

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு... அனைத்து ஏற்பாடுகளும் தயார் தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு... அனைத்து ஏற்பாடுகளும் தயார்

தடியடி

தடியடி

வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றார். இது போல் மம்தா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய போது ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்ட பாஜகவினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் பரபரப்பு எழுந்தது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

காங்கிரஸ் குற்றச்சாட்டு

இது போல் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே அர்ஜுன் சிங் மற்றும் பாஜக தலைவர் முகுல் ராயின் மகன் சுப்ரங்ஸு ராய் ஆகியோரின் சதி திட்டம் என திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

பாஜகவில் இணைந்த டிஎம்சி

பாஜகவில் இணைந்த டிஎம்சி

இதற்கு புதிய எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அர்ஜுன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே பாஜகவில் இணைந்தார்.

10 லட்சம் அட்டைகள்

10 லட்சம் அட்டைகள்

இவர் கூறுகையில் ஜெய்ஸ்ரீராம் என எழுதி அதை முதல்வர் மம்தாவின் அலுவலகத்துக்கு அனுப்பவுள்ளோம். இது போல் 10 லட்சம் தபால் அட்டைகளை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு தாவும் தலைவர்கள்

பாஜகவுக்கு தாவும் தலைவர்கள்

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜக வென்று மிகப் பெரிய அரசியல் சக்தியாக மாறியுள்ளது. இதையடுத்து திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அக்கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி வருகின்றனர்.

English summary
BJP's newly elected MP who switched from TMC says that BJP will send 10 lakhs JaiShriram post cards to Mamta Banerjee's CM office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X