Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊழலை ஒழித்து.. சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியாவை 3வது இடத்திற்கு கொண்டு செல்வோம்! பாஜக வாக்குறுதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாஜக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பல வாக்குறுதிகள் கவனம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியாவை 5வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு உயர்த்துவோம் என பாஜக கூறியிருப்பது பேசு பொருளாகியுள்ளது.

ஏப்ரல் 19ம் தேதி 22 மாநிலங்களில் முதற்கட்ட லோக்சபா தேர்தல் தொடங்குகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை பெரும் கவனம் ஈர்த்திருந்தது. இந்நிலையில், அம்பேத்கர் பிறந்த தினமான இன்று, பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

BJP s election manifesto promises to make India the 3rd largest economy

மோடியின் கேரண்டி என்கிற தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கூட்டாக அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கை, பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் நலனில் அக்கறை கொண்டிருப்பதாக பாஜகவினர் கூறியுள்ளனர். இதில்,

1. முத்ரா திட்டத்தின் கடன் ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் - பாஜக தேர்தல் அறிக்கை
2. இந்தியாவை 3 வது பெரிய பொருளாதார நாடாக உயர்த்துவோம் - பாஜக
3. ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - பாஜக
4. 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும் - பாஜக
5. 3 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டி தரப்படும்; 5 ஆண்டுகளுக்கு இலவச தானியம் - பாஜக
6. புதிய விமான நிலையங்கள், புதிய ரயில் நிலையங்கள் உருவாக்கப்படும் - பாஜக

ஆகிய வாக்குறுதிகள் கவனம் பெற்றிருக்கின்றன. இதில் இந்தியாவை சர்வதேச பொருளாதாரத்தில் 3வது நாடாக உயர்த்துவோம் என்கிற வாக்குறுதியை பொருளாதார வல்லுநர்கள் வரவேற்றிருக்கிறார்கள்.

கடந்த 2022ம் ஆண்டு மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டனை வீழ்த்தி இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியது என்று ப்ளூம்பெர்க் நிறுவனம் கூறியிருந்தது. அதாவது, கடந்த 2021ம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில், இந்தியப் பொருளாதாரம் பிரிட்டனைவிட வளர்ச்சி அடைந்ததே, இந்தியா 5வது இடத்திற்கு வர காரணம் என்று ப்ளூம்பெர்க் கூறியிருந்தது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா இந்தப் பட்டியலில் 11-வது இடத்தில் இருந்தது. விரிவாக சொல்வதெனில், கடந்த 2014ம் ஆண்டில் நமது ஜிடிபி 2 டிரில்லியன் டாலராகவும், பிரிட்டனின் ஜிடிபி 3 டிரில்லியன் டாலராகவும் இருந்தது. இது 2022ல் இந்தியாவின் ஜிடிபி 3.5 டிரில்லியன் டாலராகவும், பிரிட்டனின் ஜிடிபி 3.4 டிரில்லியன் டாலராகவும் உயர்ந்தது.

இதே நிலை தொடர்ந்தால், 2027ல் இந்தியாவின் ஜிடிபி 5.5 டிரில்லியன் டாலராகவும், பிரிட்டனின் ஜிடிபி 4.6 டிரில்லியன் டாலராகவே இருக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் கணித்திருக்கிறது. இதை கருத்தில் கொண்டுதான் பாஜக தற்போதைய தேர்தல் அறிக்கையில், இந்தியாவை சர்வதேச பொருளாதாரத்தில் 3வது நாடாக உயர்த்துவோம் என்று கூறியிருக்கிறது. பாஜகவின் இந்த அறிக்கைக்கு பொருளாதார வல்லுநர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+