மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! மர்மநபர்கள் அச்சுறுத்தல்.. டெல்லியில் பரபரப்பு
டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கும், இரண்டு மருத்துவமனைகளுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தற்போது, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கும், புராரி மற்றும் மங்கோல்புரியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

மிரட்டல்கள் மின்னஞ்சல் வழியாக வந்திருக்கின்றன. இது தொடர்பாக தீயணைப்பு துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் திடீர் அதிரடி சோதனையை நடத்தினர். இந்த சோதனையில் தற்போது வரை வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இந்த மிரட்டல் புரளி என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் குறிதது பேசிய டெல்லி தீயணைப்பு துறையினர், "வெடிகுண்டு மிரட்டல் குறித்து புராரி மற்றும் மங்கோல்புரியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் இருந்து புகார்கள் வந்தன. புகாரையடுத்து நாங்கள் தீவிர சோதனையில் இறங்கினோம். ஆனால் எங்களுக்கு அப்படி எதுவும் கிடைக்கவில்லை. காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. அதாவது கடந்த மே 1ம் தேதி டெல்லியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் பெற்றோரை வரவழைத்து அவசர அவசரமாக மாணவர்களை பள்ளி நிர்வாகம் வெளியேற்றியது.
சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு குழு மற்றும் தீயணைப்பு துறையினர் பள்ளிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளிகளுக்கு போலியான மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரியவந்தது.
தற்போதைய வெடிகுண்டு மிரட்டலுக்கும், இப்போதைய மிரட்டலுக்கும் இடையே ஓர் ஒற்றுமை உண்டு. அதாவது இரண்டு மிரட்டல் சம்பவங்களும், ரஷ்ய மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளன.
இந்த இரண்டு சம்பவங்களுக்கும் முன்னதாக ஏப்.30ம் தேதி டெல்லியின் சில மருத்துவமனைகளுக்கு இதேபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது என டெல்லி காவல்துறை அதிகாரி ரவீந்தர் யாதவ் கூறியுள்ளார்.
தொடர் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் குறித்து போலீசார் மற்றும் புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications