பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போடப்படும்.. விரைவில் நடவடிக்கை.. மத்திய அரசு அறிவிப்பு
பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளதாம்
டெல்லி: நிபுணர் குழு பரிந்துரைத்தால் பூஸ்டர் தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
கொரோனாவைரஸ் தொற்று பரவலை இன்னும் ஒழிக்க முடியவில்லை.. கொரோனாவின் பாதிப்பு குறைய தொடங்கியபோது, அந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறி விட்டது.. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்றும் அதற்கு பெயரிடப்பட்டது...
இதில் மிக மிக ஆபத்தானது டெல்டா வகை கொரோனாதான்.. பல மடங்கு வீரீயம் கொண்டது.. பரவும் வேகம் கொண்டது.. அதனால்தான், டெல்டா வகை வைரஸ் பல்வேறு நாடுகளை தாக்கியது... இப்போது இந்த டெல்டாவைவிட மிரட்டக்கூடிய இன்னொரு வைரஸான ஒமிக்ரான் வந்துவிட்டது.. வேகமாக பரவும் தன்மை கொண்டது., அத்துடன் ஆபத்தானதும்கூட என்கிறார்கள் விஞ்ஞானிகள்...

டெல்டா
டெல்டாவைவிட 3 மடங்கு அதிகமாக பரவக்கூடியதாம்.. 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் புதிய கொரோனா மாறுபாட்டு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது... இது இந்தியாவிலும் நுழைந்துவிட்டது.. முதல் முறையாக பெங்களூருவில் 2 பேருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மறுபடியும் கொரோனா தடுப்பு நடவாடிக்கைகள் கொண்டு வரப்படுகின்றன... ஒமைக்ரானை "கவலைக் குரிய உருமாற்றம்" என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

டோஸ்கள்
அதேபோல, ஒமைக்ரான் வைரசின் அபாயத்தை தடுக்க, கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் போட்டுக் கொண்ட 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கொரோனா உருமாற்றத்தை கண்காணிக்கும் இந்திய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. காரணம், 2 டோஸ் தடுப்பூசி ஒமைக்ரானை முழுமையாக எதிர்க்கும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை என்றும் ஒமைக்ரானை எதிர்கொள்ள பூஸ்டர் ஊசி அவசியம் என்றும் அது எச்சரித்துள்ளது.

மன்சுக் மாண்டவியா
இப்படிப்பட்ட சூழலில்தான், பூஸ்டர் தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது... நிபுணர் குழு பரிந்துரைத்ததால் இந்த முடிவை எடுத்துள்ளது.. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மேலும் சொல்லும்போது, "கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் அல்லது குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் குறித்த எந்த ஒரு முடிவும் இந்த விஷயத்தை கவனிக்கும் நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கண்டிப்பாக எடுக்கப்படும்.

அரசியல்
இந்த முடிவை அவசரப்படுத்தவோ, அரசியலாக்கவோ முடியாது. இது தூய அறிவியல் மற்றும் அறிவின் அடிப்படையில் இருக்க வேண்டும்.. தொற்று நோயின் தொடக்கத்தில் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தினோம்.. பொதுவாக, தடுப்பூசியில் ஆராய்ச்சி செய்தால் ஒப்புதல் பெறுவதற்கே 3 வருடங்கள் ஆகும். அப்படி இருக்கும்போது, கடந்த 2 வருடங்களில் அந்த விதிகளை நாங்கள் மாற்றினோம்.. ஆராய்ச்சிக்கு பிறகு ஒரு வருடத்திற்குள்ளாகவே, தடுப்பூசியையும் பெற்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழகம்
இதனிடையே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மத்திய அரசு மற்றும் ஐ.சி.எம்.ஆர். வழங்கிய அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின்படி தான் தடுப்பூசி டோஸ்களுக்கு இடையிலான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. "பூஸ்டர் டோஸ்" தடுப்பூசி குறித்து மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. பூஸ்டர் தடுப்பூசி குறித்து மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு வந்தால், தமிழக அரசு அதனை செயல்படுத்தும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications