காங்கிரஸுக்கு ‘நாக் அவுட்’ பஞ்ச்.. பாஜகவுக்கு தாவிய பாக்சர் விஜேந்தர் சிங்.. திடீர் ஜம்ப்!
டெல்லி: குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், இன்று பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்த விஜேந்தர் சிங் கடந்த 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில், தற்போது பாஜகவில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கடந்த 2019ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த விஜேந்தர் சிங், 2019 லோக்சபா தேர்தலில் தெற்கு டெல்லியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.

ஆனால், பாஜகவின் ரமேஷ் பிதுரியிடம் தோல்வியடைந்தார் விஜேந்தர் சிங். டெல்லி தெற்கு லோக்சபா தொகுதியில் விஜேந்தர் சிங் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலிலும் விஜேந்தர் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டு வந்தது.
மதுரா தொகுதியில் ஹேமமாலினியை எதிர்த்து விஜேந்தர் சிங் களமிறக்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகி இன்று பாஜகவில் இணைந்துள்ளார் விஜேந்தர் சிங்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் விஜேந்தர் சிங் தன்னை பா.ஜ.கவில் இணைத்துக் கொண்டார். அவரை கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்ததும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த சிறிது நேரத்திலேயே, "தேசத்தின் நலனுக்காகவும், மக்களுக்கு சேவை செய்வதற்காகவும் பாஜகவில் இணைந்தேன். மேலும் மேலும் மக்களுக்கு உதவ விரும்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார் விஜேந்தர் சிங்.
விஜேந்தர் சிங் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது சொந்த மாநிலமான ஹரியானா மற்றும் மேற்கு உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் பல தொகுதிகளில் குறிப்பிடத்தக்க அரசியல் செல்வாக்கு பெற்ற சமூகத்தவராக ஜாட் சமூகத்தினர் உள்ளது குறிப்பிடத்தக்கது. விஜேந்தர் சிங்கிற்கு பாஜகவில் லோக்சபா சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications